அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்

சொத்து குவிப்பு வழக்கு: மத்திய அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில், தமி­ழக மீன்­வ­ளத் துறை அமைச்­சர் அனிதா ராதா­கி­ருஷ்­ண­னின் (படம்) சொத்­து­களை மத்­திய அம­லாக்­கத்­துறை முடக்கி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், மாநில அமைச்­சர் மீதான வழக்கு தொடர்­பில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்­ந­ட­வ­டிக்கை பரபரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை தமி­ழ­கத்­தில் காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அதி­முக ஆட்சி நடை­பெற்­றது. அப்­போது அனிதா ராதா­கி­ருஷ்­ணன் மாநில கால்­நடை, வீட்டு வசதி, நகர்ப்­புற வளர்ச்­சித் துறை­க­ளுக்­கான அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்­தார்.

இந்­தக் கால­கட்­டத்­தில் அவர் வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக ரூ.4.9 கோடி சொத்து சேர்த்­த­தா­கப் புகார் எழுந்­தது. இது தொடர்­பாக 2006ஆம் ஆண்டு காவல்­து­றை­யின் லஞ்ச ஒழிப்­புப்பிரிவு அவர் மீது வழக்­குப் பதிவு செய்­தது. மேலும், ஊழல் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­ட­தால் மத்­திய அம­லாக்­கத்­து­றை­யும் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் மீது தன் பங்­குக்கு வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்­டது.

அதன் பின்­னர் அதி­முக தலைமை­யு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக திமு­க­வில் இணைந்­தார் அனிதா ராதா­கி­ருஷ்­ணன். இப்­போது திமுக ஆட்­சி­யில் மீன்­வ­ளத்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் நடப்பு திமுக ஆட்சி அமைந்த பின்­னர் கடந்த அதி­முக ஆட்­சிக் காலத்­தில் நடை­பெற்ற ஊழல்­கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­தி­ருந்­தார். அதன்­படி, அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் பலர் மீது வழக்­கு­கள் பதி­வாகி வரு­கின்­றன. முன்­னாள் அமைச்­சர்­க­ளின் வீடு­கள், அலு­வ­ல­கங்­களில் அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், திமுக அமைச்­சர் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் மீதான வழக்கு விசா­ர­ணையை மத்­திய அம­லாக்­கத்­துறை தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது. அவர் சட்­ட­வி­ரோத பணப் பரி­வர்த்­த­னை­களில் ஈடு­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­கள் கிடைத்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து 2001 முதல் 2006 வரை­யி­லான அதி­முக ஆட்­சிக்­காலத்­தில் அவர் அமைச்­சர் பதவி வகித்­த­போது அவர் பெய­ரி­லும் குடும்­பத்­தார் பெய­ரி­லும் வாங்­கப்­பட்ட சொத்­து­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றின் மொத்த மதிப்பு ரூ.6.5 கோடி எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

160 ஏக்­கர் நிலம் உட்­பட அசை­யும், அசையா சொத்­து­கள் என 18 வகை சொத்­து­களை அம­லாக்­கத் துறை முடக்கி இருப்­ப­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!