தமிழ் பரப்புரைக் கழகத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கிய அரசு

சென்னை: தமிழ் பரப்­பு­ரைக் கழ­கத்தை உரு­வாக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

வெளி­நா­டு­க­ளி­லும் வெளி மாநி­லங்­க­ளி­லும் வாழும் தமி­ழர்­களுக்கு தமிழ் கற்­பிக்க இந்த பரப்­பு­ரைக் கழ­கம் உரு­வாக்­கப்­படு­கிறது.

இதற்­காக தமிழ் இணை­ய­வழிக் கல்­விக் கழ­கம் மூலம் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள தமி­ழக அரசு, தமிழ் மொழி­யின் பண்­பாடு, கலா­சா­ரப் பரப்­பு­ரைப் பணி­கள் மேற்­கொள்ளப்­படும் என குறிப்­பிட்­டுள்­ளது.

"மேலும், ஒலி, ஒளி உச்­ச­ரிப்பு­டன் பாடப்­புத்­த­கம் வடி­வ­மைத்­தல், தமிழ் கற்­ப­தற்­கான வச­தி­கள் ஏற்­ப­டுத்­து­தல், இணை­யத்­தில் தமிழ் ஆசி­ரி­யர்­கள் மூலம் கற்றுத் த­ரு­தல், தமிழை வெளி­நா­டு­கள், வெளி­மா­நி­லங்­களில் கற்­பிக்­கும் அமைப்­பு­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கு­தல், பயிற்சி பெற்ற ஆசி­ரி­யர்­களை அனுப்பி வைத்­தல் ஆகிய செயல்­பா­டு­களை மேற்­கொள்ள முடி­யும் என தமிழ் வளர்ச்சி இயக்­கு­நர் தெரி­வித்­துள்­ளார்," என அரசு செய்­திக்­கு­றிப்பு ஒன்­றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, அர­சின் கவ­ன­மான பரி­சீ­ல­னைக்­குப் பின்­னர், தமிழ் வளர்ச்சி இயக்­கு­ந­ரின் பரிந்துரை யின் அடிப்­ப­டை­யில், தமிழ் இணைய வ­ழிக் கல்­விக் கழ­கத் தில் இ­ருந்து தமிழ் பரப்­பு­ரைக் கழ­கம் நிறு­வப்­பட இருப்­ப­தா­க­வும் இதன் பொருட்டு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் தமி­ழக அரசு மேலும் கூறி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!