பிரசாரம் முடிந்ததும் வெளியூர்க்காரர்கள் வெளியேற உத்தரவு; பள்ளிகளுக்கு விடுமுறை இன்று ஓய்வு; நாளை வாக்களிப்பு

சென்னை: தமிழ்­நாட்­டில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான கார­சா­ரப் பிர­சா­ரம் ஒரு­வ­ழி­யாக நேற்று மாலை­யு­டன் ஓய்­வ­டைந்­தது. இன்று வேட்­பா­ளர்­கள் முதல் தொண்­டர்­கள் வரை அனை­வ­ருக்­கும் களப் பணியில் இருந்து ஓய்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

மாநிலத்தில் 12,838 வார்டு உறுப்­பி­னர் பத­வி­க­ளுக்­கான வாக்­குப்­பதிவு நாளை 19ஆம் தேதி ஒரே கட்­ட­மாக நடை­பெற உள்­ளது.

அமை­தி­யான முறை­யில் தேர்­தலை நடத்தி முடிக்க மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள நிலையில், உள்­ளூர்­கா­ரர்­க­ளைத் தவிர வெளி­யூர்­களில் இருந்து பிர­சா­ரத்­துக்­காக வந்­த­வர் கள் யாரும் தங்கி இருக்­கக்­கூ­டாது எனவும் உத்தரவிட்டுள்­ளது.

பதற்­ற­மான வாக்­குச்சாவ­டி­களில் ரக­சிய கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­களும் பொருத்­தப்­பட்­டு, வாக்­குப்­பதிவு முழு­மையாக காணொ­ளி­யா­கப் பதிவு செய்­யப்­படும் என தேர்­தல் அதி­கா­ரி­கள் கூறியுள்­ள­னர்.

தேர்­தலை முன்­னிட்டு நாளை பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விடப்­படு­வ­தாக பள்­ளிக்­கல்வி ஆணையா் க.நந்­த­குமாா் அறி­வித்­துள்­ளார்.

நேற்­றைய இறு­திக்­கட்ட வாக்குச் சேக­ரிப்­பின்­போது வடை, போண்டா, சுழியன், சிப்ஸ் தயா­ரித்­துக் கொடுத்து வேட்­பா­ளர்­கள் வாக்குச் சேக­ரித்­த­னர்.

வாக்­குக்­குப் பணம் கொடுப்­பதைத் தடுக்க மாநி­லம் முழு­வ­தும் 1,800க்கும் மேற்­பட்ட பறக்­கும் படை­கள் கண்காணித்து வந்ததாக தோ்தல் அதி­கா­ரி­கள் கூறினா்.

இருப்பினும், ஆங்காங்கே ஆயி ரக்கணக்கில் பணம் கொடுப்பதும் பரிசுப்பொருள்கள் கொடுப்பதும் தொடர்ந்ததாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

திமுக அர­சின் திட்­டங்­கள் நாட்­டுக்கே முன்­னோ­டி­யாக அமைந் திருப்­ப­தாக பிர­சா­ரத்­தில் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தமிழ் நாட்டை பழ­னி­சாமி அரசு கட­னாளி ஆக்­கி­வி­ட்டதா­க குற்­றம்­சாட்­டி­னார்.

வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­முக வினர் பட்­டுப்­பு­டவை கொடுத்­த­தாக புகார் கூறப்­பட்ட நிலை­யில், சென்­னை­யில் ஆயி­ரத்­திற்­கும் ேமற்­பட்ட பட்­டுப் புடவை டோக்­கன்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

புதுக்­கோட்டை நக­ராட்­சி­யில் போட்­டி­யி­டும் நாம் தமி­ழர் கட்சி வேட்­பா­ளர் 8 கிலோ கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். இதர, ஐந்து பேரை­யும் கைது செய்து காவல்­துறை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

"தேர்­தல் நேரத்­தில் வாக்­கு­றுதி­களை அள்ளி வீசு­வ­தில் இரு கட்­சி­யி­ன­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் சளைத்­த­வர்­கள் அல்ல. ஊழல் வெற்றிபெற நீங்­கள் முக்­கிய கார­ண­மாக இருக்­கக்­கூ­டாது," என்று மநீம கட்­சித் தலை­வர் கமல்ஹாசன் வேண்­டு­கோள் விடுத்தார்.

கோவை­யில் தேமு­திக வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­துப் பேசிய பிரேம லதா விஜ­ய­காந்த், இப்­போ­துள்ள முதல்­வ­ரும் முன்­னாள் முதல்­வ­ரும் போட்டி போட்­டிக்­கொண்டு பணம் கொடுத்து வாக்­குச்­ சேக ரித்து வருகின்றனர். மக்­க­ளுக்­கு இவர்கள் நல்­லது செய்­வார்­களா என்பது கேள்விக்குறியே என்றார்.

ஒசூ­ரில் எதிா்க்­கட்­சித் தலைவா் பழ­னி­சாமி பேசியபோது, "சாவி கொடுத்­தால் கைதட்­டும் பொம்மை தான் முதல்­வர் ஸ்டா­லின்,'' என கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!