தபால்கள் பிரிக்கும் பணி: குறைவான தமிழர்கள் தேர்வு

சென்னை: தமி­ழ­கத்­தில் தபால்­களைப் பிரிக்­கும் பணிக்குத் தேர்­வான 946 பேரில், தமி­ழ­கத்தைச் சேர்ந்த 46 பேர் மட்­டுமே தேர்­வாகி உள்­ள­னர். இதை ஏற்க இய­லாது என மதுரை நாடா­ளு­மன்­றத் தொகுதி உறுப்­பி­னர் சு.வெங்­க­டேசன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், வேலை வாய்ப்பு என்று வரும்­போது, எல்­லா­வற்­றை­யும் இந்தி பேசும் மாநி­லங்­களே தட்­டிச் செல்­கிற வகை­யில் தேர்வு முறைமை இருப்­பது நியா­யமா? என அவர் கேள்வி எழுப்பி உள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் அஞ்­சல் உத­வி­யா­ளர்­க­ளாக, தபால் பிரிப்பு உத­வி­யா­ளர்­க­ளாக பணி­யாற்­று­வ­தற்­காக 946 பேர் கொண்ட தேர்­வுப்­பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதில் தமி­ழ­கத்தைச் சேர்ந்த 46 பேர் மட்­டுமே தேர்­வாகி உள்­ள­னர்.

"வட­மா­நி­லத்தைச் சேர்ந்­த­வர்­களே தமிழ்­நாட்­டில் உள்ள 57 அஞ்­சல் கோட்­டங்­களில் சிற்­றூர்­களில் உள்ள தபால்­களைப் பிரித்து தரப் போகி­றார்­கள். அவர்­க­ளால் முக­வ­ரி­களை சரி­யாக வாசிக்க முடி­யுமா?" என்று கேள்வி எழுப்பி உள்­ளார் சு.வெங்­க­டே­சன்.

இந்­தி­யர்­கள் என்ற வகை­யில் அனை­வ­ரை­யும் நேசிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், மக்­கள் சேவை எனும்­போது மாநில மொழி தேர்ச்சி மிக அவ­சி­யம் என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!