வாக்குப்பதிவில் முறைகேடு: ஏழு வாக்குச் சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த 19ஆம் தேதி­யன்று ஒரே கட்­ட­மாக நடத்­தப்­பட்ட நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் இன்று எண்­ணப்­ப­டு­கிறது.

முதலில் தபால் வாக்குகளும் பின்னர், மின்னணு வாக்கு இயந்தி ரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

மாநி­லம் முழு­வ­தும் அமைக்­கப் பட்­டுள்ள 268 வாக்கு எண்­ணும் மையங்­க­ளி­லும் தலா 500 காவல் துறை அதி­கா­ரி­கள் பாது­காப்­புக் காக நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

சென்னை மாந­க­ராட்­சி­யில் பதி­வான வாக்­கு­கள் 15 மையங்­களில் எண்­ணப்­ப­டு­கின்­றன.

காலை 8 மணிக்­குத் தொடங்­கும் வாக்கு எண்­ணும் பணி எந்த ஓர் அசம்­பா­வி­த­மும் இன்றி அமை­தி­யான முறை­யில் நடை­பெ­றும் வகை­யில் காவல்­துறையினர் நட­வ­டிக்கைகளை எடுத்­துள்­ள­னர்.

தேர்­த­லுக்­கான வெற்றி நில­வரத்தை அறி­விக்­கும்­போது வாக்கு எண்­ணும் மையத்­தில் இருந்து 100 மீட்­டர் தூரம் வரை பட்­டாசு வெடிக்­கக்­கூ­டாது என­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, சேலம் மாவட்­டம், எடப்­பாடி அருகே வாக்கு எண்­ணும் மையத்­தில் இருந்த சிசி­டிவி, காணொ­ளித் திரை பழு­த­டைந்த தாகக் கூறி அதி­முக உள்­ளிட்ட அனைத்­துக் கட்சி வேட்­பா­ளர்­களும் முக­வர்­களும் நள்­ளி­ர­வில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதை­யடுத்து பதற்­றத்­தைத் தவிர்க்க அங்கு காவல்­துறை அதி­கா­ரி­கள் குவிக்­கப்­பட்­ட­னர்.

இதேேபால், சீர்­கா­ழி­யில் வாக்கு இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­பட்­டுள்ள தனி­யார் பள்­ளி­யில் காணொ­ளித் திரை பழு­தா­னதை அடுத்து அங்கு திரண்ட அனைத்­துக் கட்சி வேட்­பா­ளர்­கள் அதி­கா­ரி­க­ளி­டம் வாக்கு­வா­தத்­தில் ஈடு­பட்டனர்.

நான்கு மாவட்­டங்­களில்

மறு வாக்­குப்­ப­திவு

இதற்­கி­டையே, சென்னை, மதுரை, அரி­ய­லூர், திரு­வண்ணா மலை ஆகிய நான்கு மாவட்­டங் களில் உள்ள ஏழு வாக்­குச்­சா­வடி களில் நேற்று மறு வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்த லுக்­கான வாக்­குப்­ப­திவு கடந்த 19ஆம் தேதி நடை­பெற்­ற­போது, சில இடங்­களில் கள்ள வாக்­கு­கள் போடப்­பட்­ட­தா­க­வும் வாக்கு இயந் திரத்தை சிலர் அடித்து நொறுக்­கியதாக­வும் சின்­னத்­தில் குள­று­படி ஏற்­பட்­ட­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் கூறப்­பட்­டன.

இதை­ய­டுத்து, மறு வாக்­குப்­பதிவு நடத்­த­வேண்­டும் என தேர்­தல் ஆணை­யத்தை பல்­வேறு கட்­சி­களும் வலி­யு­றுத்தி வந்­தன.

இந்­நி­லை­யில், மறு வாக்­குப்­பதிவு நடத்த தேர்­தல் ஆணை­யம் உத்­தரவிட்­டதை அடுத்து, ஐந்து வார்­டு­களில் உள்ள ஏழு வாக்­குச்­சா­வ­டி­களில் காவல் துறை அதி­கா­ரி­க­ளின் பாது­காப்­பு­டன் வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

மறு வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் இடங்­களில் வாக்­க­ளிக்­கும் வாக்­கா­ளர்­க­ளின் இடது கையின் நடு­வி­ர­லில் அழியா மை வைக்­கப் படும் என தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­திருந்தது.

காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் என்­றும் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மாலை 5 முதல் 6 மணி வரை வாக்­குப்­பதிவு நடை­பெ­றும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!