கே.எஸ்.அழகிரி: காங்கிரசுடன் பாஜகவை ஒப்பிடுவதை அறவே ஏற்கவே இயலாது

சென்னை: காங்­கி­ரஸ் கட்­சி­யை­விட பாஜக பெரிய கட்சி என்று சொல்­வது எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத வாதம் என்று தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி (படம்) தெரி­வித்­துள்­ளார்.

நடந்து முடிந்­துள்ள நகர்ப்­புற உள்ளாட்­சித் தேர்­த­லில் பத்து மாவட்­டங்­களில் வெற்­றிக்­க­ணக்கையே தொடங்­காத பாஜ­க­வு­டன் காங்­கிரஸ் கட்சியை ஒப்­பிட்­டுப்பேசு­வற்கு யாருக்கும் தகுதி கிடை­யாது என்று ஓர் அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கடந்த 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்டி­யிட்டு, பெற்ற இடங்­களைவிட தற்­போது 0.7 விழுக்­காடு இடங்­களை மட்­டுமே அதி­க­மாக பெற்­றுள்­ளது பாஜக. இதை வைத்து மூன்­றா­வது பெரிய கட்சி என்று கூறிக்­கொள்ள அக்­கட்­சிக்கு எந்­த­வித தகு­தி­யும் கிடை­யாது.

"மேலும், சென்னை மாந­க­ராட்சி­யில் 200 வார்­டு­களில் போட்­டி­யிட்டு ஒரே ஒரு இடத்­தில் மட்­டுமே வெற்றி பெற்ற பாஜக 16 இடங்­களில் போட்டி­யிட்டு 13 இடங்­களில் வெற்றி பெற்ற காங்­கி­ரஸ் கட்­சி­யை­விட பெரிய கட்சி என்று சொல்­வதை ஏற்க இய­லாது," என்று கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

2011ஆம் ஆண்டு தனித்­துப் போட்­டி­யிட்­ட­போது 2.07 விழுக்­காடு இடங்­க­ளைப் பெற்ற காங்­கி­ரஸ் கட்சி, தற்­போது 2022 மாந­க­ராட்சித் தேர்தலில் 59.34% இடங்­க­ளை­யும் நக­ராட்­சித் தேர்­த­லில் 4.4% இடங்­களில் இருந்து, தற்­போது 38.32% இடங்­களை­யும் கூடு­த­லாகப் பெற்று மகத்­தான வெற்­றியை ஈட்­டி­யி­ருக்கிறது என்று அழ­கிரி சுட்­டிக்­காட்டி உள்­ளார். எனவே, காங்­கி­ரஸ் கட்­சி­யோடு பாஜ­கவை ஒப்­பி­டு­வதை இனி­யா­வது தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை நிறுத்­திக்­கொள்ள வேண்­டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!