சொந்தக் காலில் நின்று 2024ல் கண் வைக்க பாஜக ஆயத்தம்

சென்னை: தமிழ்­நாட்­டில் நடந்து முடிந்த நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்த­லில் கிடைத்த வெற்றி ஊக்­கத்தை அடிப்­ப­டை­யாக வைத்து 2024ல் நடக்­கும் தமி­ழக நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதே அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டித்து சாதனை படைக்க வேண்­டும் என்று தமி­ழக பாஜ­க­வுக்கு மேலி­டம் கட்­டளை இட்டு இருப்­ப­தாக ஊட­கச் செய்தி­கள் தெரி­விக்­கின்­றன.

2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் எப்­ப­டி­யா­வது குறைந்­த­பட்­சம் ஆறு இடங்­களையாவது வென்­று­விட வேண்­டும்.

அதைத் தொடர்ந்து 2026ல் நடக்­கும் மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மாபெ­ரும் வெற்­றி­யைப் பெற்று தமிழக ஆட்­சி­யைப் பிடித்­து­விட வேண்­டும் என்று மாநில பாஜ­கவுக்கு இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அத்தக­வல்­கள் கூறு­கின்­றன.

நடந்து முடிந்த நகர உள்­ளாட்சித் தேர்­த­லில் தனித்து போட்­டி­யிட்ட பாஜக, 242 பேரூ­ராட்சி வார்­டு­கள், 56 நக­ராட்சி வார்­டு­கள், 22 மாநகராட்சி வார்­டு­கள் உள்ளிட்ட பல வார்­டு­க­ளை­யும் கைப்­பற்றி மாநி­லத்­தின் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக உரு­வெ­டுத்துள்ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யில் 21 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அது முதல் வெற்­றியை சாதித்து இருக்­கிறது.

இது­வரை இல்­லாத அள­வுக்கு மாநில பாஜக இந்­தத் தேர்­த­லின்­மூ­லம் புது தெம்பைப் பெற்று சொந்தக் காலில் எழுந்து நிற்க முயற்சி செய்­வ­தா­க­வும் வரும் தேர்­தல்­களை அது புதிய வலுவு­டன் அணுக இந்த வெற்றி ஊக்கம் தந்து உத­வும் என்றும் கவ­னிப்­பாளர்­கள் கூறு­கிறார்­கள்.

மேலி­ட கட்­ட­ளையை அடுத்து மாநில பாஜக, நகர்ப்­பு­றங்­களில் திறம்­பட செயல்­பட்டு தன்­னு­டைய பலத்தை வலு­வாக்­கிக்கொள்­ளும் வகை­யில் இப்­போதே வியூ­கங்­களை வகுக்­கத் தொடங்­க­விட்­ட­தாக அரசியல் பேச்சு அடிப­டு­கிறது.

இதற்கு ஆத­ர­வாக உத்­தரப்­பிரதேச சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு பாஜக மேலி­டம் தமிழ்­நாட்­டின்­மீது ஒரு­மித்த கண் வைக்­கப் போவ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அதே­வே­ளை­யில், ஆளும் கட்சி­யான திமு­க­வும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கான களப்­பணி வியூகங் களைப் படுசுறு­சு­றுப்­பாக திட்­ட­மிட்டு வரு­வ­தா­க­வும் அர­சி­ய­ல் கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள். மொத்­தத்­தில் நடந்து முடிந்த உள்­ளாட்சித் தேர்­தல், தமிழ்­நாட்­டின் வருங்­கால அர­சி­ய­லில் பெரும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் என்பதே அவர்களின் கணிப்பாக இருக்கிறது.

அசைக்க முடி­யாத இமா­லய சக்­தி­யாக இருந்து வந்த அதி­முக, இனி தன்­னு­டைய வியூ­கத்­தை­யும் அணு­கு­மு­றை­யை­யும் இலக்­கு­க­ளை­யும் மாற்­றிக்­கொள்ள வேண்டி இருக்கும் என்­றும் தெரிகிறது.

அதே­வே­ளை­யில், பாமக, தேமுதிக போன்ற அர­சி­ய­லில் குறிப்­பிட்ட வாக்­கு­க­ளைத் தக்கவைத்துக் கொண்டு இருந்த கட்­சி­கள், இது வரை தாங்கள் கொண்டிருந்த அளவுக்கு இனி முக்­கி­யத்­து­வத்துவம் பெற்றிருக்காது என்­றும் அவர்­கள் கணிக்­கி­றார்­கள்.

உசுப்பிவிட்ட உள்ளாட்சித் தேர்தல்; திமுகவும் அதிரடியாக தயாராகிறது என தகவல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!