ராமஜெயம் கொலை: புதிய கோணத்தில் முழுவீச்சில் விசாரணை

திருச்சி: திருச்­சியைச் சேர்ந்த திமுக அமைச்­சர் கே என் நேரு­வின் தம்­பி­யான தொழில்­துறை பெரும்புள்ளி ராம­ஜெ­யம், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதி­கா­லை­யில் கொடூர­மான முறை­யில் கொலை செய்­யப்­பட்­டார்.

அவ­ரின் உடல், திருச்சி கல்லணை ரோட்­டில் பொன்­னி­டெல்டா பகுதி காவிரி ஆற்றுக் கரை­யோ­ரம் தூக்கி வீசப்­பட்டு கிடந்­தது. கொலை நடந்து 10 ஆண்­டு­கள் ஆன நிலை­யில் ராம­ஜெ­யம் கொலை பற்­றிய புலன்­வி­சா­ரணை புது கோணத் தில் முழு­வீச்­சில் தொடங்­கும் என்று இப்­போது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக அள­வில் பெரும் பரபரப்பை ஏற்­ப­டுத்­திய இந்தக் கொலை சம்­ப­வம் குறித்து முதலில் ஸ்ரீரங்­கம் காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து 12 தனிப்­படை­கள் அமைத்து விசா­ரணை தொடங்­கி­யது.

எந்த முன்­னேற்­ற­மும் இல்­லா­ததை அடுத்து வழக்கு நான்கு மாதங்­கள் கழித்து சிபி­சி­ஐடி அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­கள் ஆன போதி­லும் சிபி­சி­ஐடி விசாரணை­யில் ஒன்­றும் வெளி­வ­ர­வில்லை. இந்­நி­லை­யில், வழக்கை சிபிஐ விசா­ர­ணைக்கு மாற்ற வேண்­டும் என்று ராம­ஜெ­யத்­தின் மனைவி லதா வழக்கு தாக்­கல் செய்­தார்.

ஆனால் பல தடங்­கல்களுக்­குப் பிறகு கடை­சி­யாக 2017ஆம் ஆண்டு நவம்­ப­ரில் வழக்கு சிபிஐ வச­மா­னது. சிபிஐ விசா­ரித்து வந்­தது. அதற்­குள் நான்கு ஆண்­டு­கள் ஓடி­ய­து­தான் மிச்­சம். அதை­யடுத்து வழக்கு விசா­ர­ணையை மறு­ப­டி­யும் தமி­ழக அர­சி­டம் ஒப்­படைக்க வேண்­டும் என்று ராம­ஜெ­யத்­தின் சகோ­த­ரர் ரவிச்­சந்­திரன் நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டார்.

இதற்­குத் தமி­ழக காவல் துறை தயார் என்று அறி­விக்க, கொலை விசா­ரணை மறு­ப­டி­யும் தமி­ழக காவல் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நீதி­மன்றக் கண்­கா­ணிப்­பில் சிறப்பு புல­னாய்­வுக்­குழு அமைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ராம­ஜெ­யம் கொலை விசா­ரணை பற்றி கருத்து தெரி­வித்த தமி­ழக காவல்­துறை மூத்த அதி­காரி ஒரு­வர், அடுத்த ஓரிரு நாள்­களில் டிஜிபி தலை­மை­யில் ஆலோ­சனைக் கூட்­டம் நடக்­கும் என்­றும் இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­களை ஆய்வு செய்து புதிய கோணத்­தில் விசாரணை முழு­மூச்­சில் தொடங்­கும் என்­றும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!