43% அள்ளிய திமுக; பாஜகவுக்கு 4.9%

உள்ளாட்சித் தேர்தல்: திமுக முதலிடம், பாஜகவுக்கு மூன்றாமிடம்

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் மாநி­லம் முழு­வ­தும் பதி­வான வாக்­கு­களில் திமுக 43 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது.

இரண்­டாம் இடத்­தைப் பிடித்­துள்ள அதி­முக 24 விழுக்­காடு வாக்­கு­களும் மூன்­றாம் இடத்­தில் உள்ள பாஜக 4.9 விழுக்­காடு வாக்­கு­க­ளை­யும் பெற்­றுள்­ளன. அதே வேளையில் மாநகராட்சி அளவில் பாஜகவுக்கு சுமார் 7% வாக்குகள் கிடைத்துள்ளன.

நடந்து முடிந்­துள்ள நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் தமி­ழகத்தில் உள்ள 21 மாந­க­ராட்­சி­க­ளை­யும் கைப்­பற்றி சாதனை படைத்­துள்­ளது திமுக. மேலும், மாநி­லம் முழு­வ­தும் உள்ள பெரும்­பா­லான நக­ராட்­சி­கள், பேரூ­ராட்­சி­க­ளை­யும் கைப்­பற்­றி­யுள்­ளது.

அதி­மு­க­வும் திமு­க­வும் மாறி மாறி ஆட்­சி­யைப் பிடிப்­ப­தும் வாக்கு விகி­தத்­தைப் பொறுத்­த­வரை முதல் இடத்­தை­யும் இரண்­டாம் இடத்­தைப் பிடிப்­ப­தும் புதி­தல்ல. இம்­முறை அதிக வாக்­கு­க­ளைப் பெற்ற கட்சி­க­ளின் பட்­டி­ய­லில் பாஜ­க­வுக்கு மூன்­றாம் இடம் கிடைத்­துள்­ளதை அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் உற்­று கவ­னிக்­கின்­ற­னர்.

இம்­முறை மாந­க­ராட்­சி­க­ளைப் பொறுத்­த­வரை காங்­கி­ர­சுக்கு 3.16 விழுக்­காடு வாக்­கு­கள் கிடைத்­துள்ள நிலை­யில், அக்­கட்­சி­யைப் பாஜக முந்­தி­யுள்­ளது.

அதே­போல் நாம் தமி­ழர் கட்சி 2.51, மக்­கள் நீதி மய்­யம் 1.82%, பாமக 1.42%, அம­முக 1.38%, தேமு­திக 0.95% ஆகி­ய­வை­யும் பாஜ­க­வை­விட குறை­வான வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளன. நக­ராட்சி, பேரூ­ராட்­சி­களில் பெற்­றுள்ள வாக்கு விகி­தங்­களும் கிட்­டத்­தட்ட இதே அள­வில்­தான் உள்­ளன.

"இம்­முறை தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் பாஜ­க­வின் பிர­சா­ரம் ஊடு­ருவி இருக்­கிறது. அது பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்த­வில்லை என்­றா­லும் பாஜ­க­வைப் பொறுத்­த­வ­ரை­யில் சில பகு­தி­களில் முதன்­மு­றை­யா­கப் பெற்­றுள்ள வெற்றி என்­பது அக்­கட்­சிக்கு உற்­சா­கத்தை அளித்­துள்­ளது. இதைப் பயன்­ப­டுத்தி அக்­கட்­சி­யின் மாநி­லத் தலைமை அடுத்­த­கட்ட திட்­டங்­களை நம்­பிக்­கை­யு­டன் வகுக்­கத் தொடங்­கும் என எதிர்­பார்க்­க­லாம்," என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.

அதே­ச­ம­யம் முத­லி­டம் பிடித்­துள்ள திமு­க­வின் அசு­ரப் பாய்ச்­சல் நிச்­ச­யம் எதிர்க்­கட்­சி­யான அதிமுக­வுக்கு பெரும் கலக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கும் என்­றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

"அதி­மு­க­வை­விட திமுக சுமார் 18 விழுக்­காடு அள­வுக்கு கூடு­தல் வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது. எனவே எதிர்க்­கட்­சி­கள் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்­தால் தேர்­தல் முடி­வு­கள் திமு­க­வுக்கு பாத­க­மாக அமைந்­தி­ருக்­கும் என்று கூறப்­ப­டு­வதை அக்­கட்­சித் தலைமை ஏற்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

"மாநில அள­வில் வலு­வான சக்­தி­யாக நீடிப்­ப­தால்­தான் தேசிய அர­சி­யல் பக்­க­மும் தன் கவ­னத்தை திமுக தலைமை திருப்பி இருக்­கிறது. எனவே அதி­முக தலைமை கட்­சியை வலுப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளது," என்­றும் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!