தேர்தல் தோல்வி: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல்

எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

சென்னை: அதி­மு­க­வில் மீண்­டும் உட்­கட்­சிப் பூசல் வெடித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­களில் இர­வோடு இர­வாக ஒட்­டப்­பட்­டுள்ள சுவ­ரொட்­டி­கள் அக்­கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

'அதி­மு­க­வுக்கு தொடர் தோல்­வி­களை மட்­டுமே பெற்­றுத் தந்­துள்ள எடப்­பாடி பழ­னி­சாமி பதவி விலக வேண்­டும்' எனும் வாச­கம் அந்­தச் சுவ­ரொட்­டி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இது ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பின் வேலை என்று எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு குற்­றம்­சாட்­டு­வ­தா­க­வும் தமக்கு இதில் எந்­த­விதத் தொடர்­பும் இல்லை என பன்­னீர்­செல்­வம் தரப்­பில் கூறப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதி­மு­க­வில் இரட்­டைத் தலைமை என்ற ஏற்­பாட்­டுக்­குப் பின்­னர் பழ­னி­சாமி, பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் இடையே அவ்­வப்­போது நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் மோதல்­கள் வெடித்து வரு­கின்­றன. இரு தரப்­பி­ன­ரும் தனித்­த­னி­யா­கவே செயல்­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், உள்­ளாட்­சித் தேர்­த­லுக்கு முன்பு கட்­சித்­தேர்­தல் நடத்­தப்­பட்டு இரு­வ­ரும் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வி­க­ளுக்­குப் போட்­டி­யின்றி ஒரு­ம­ன­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.

இத­னால் உட்­கட்­சிப்­பூ­சல் முடி­வுக்கு வந்­துள்­ள­தாக கட்சி நிர்­வா­கி­கள் நிம்­ம­திப் பெரு­மூச்­சு­விட்­ட­னர்.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­காக இரு தலை­வர்­களும் தனித்­த­னி­யாக பிர­சா­ரம் மேற்­கொண்ட நிலை­யில், அதி­முக கணி­ச­மான இடங்­க­ளைக் கைப்­பற்றி மீண்­டும் வலு­வான எதிர்க்­கட்­சி­யாக நிமிர்ந்து நிற்­கும் என நிர்­வா­கி­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பு நில­வி­யது.

ஆனால் ஒரு மாந­க­ராட்­சி­யைக் கூட கைப்­பற்ற முடி­யா­மல் கட்சி படு­தோல்வி அடைந்­தி­ருப்­பது அதி­முக நிர்­வா­கி­க­ளை­யும் தொண்­டர்­க­ளை­யும் கடும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

இதுவே மீண்­டும் உட்­கட்­சிப் பூச­லுக்கு வித்­திட்­டுள்­ளது. இரட்­டைத் தலைமை வேண்­டாம் என்று நிர்­வா­கி­களில் ஒரு தரப்­பி­னர் மீண்­டும் வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தொடங்கி உள்­ள­னர். கட்­சித் தலை­மையை முழு­மை­யாக தன் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வர பழ­னி­சாமி விரும்­பு­வ­தா­க­வும் பன்­னீர்­செல்­வம் தரப்பு இதற்கு உடன்­ப­ட­வில்லை என்­றும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

"திமுக உறுப்­பி­னர் தாக்­கப்­பட்ட வழக்­கில் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மாரை சந்­திக்க எடப்­பாடி பழ­னி­சாமி மட்­டும் சென்­றார். இது­கு­றித்து பன்­னீர்­செல்­வத்­துக்கு எந்­த­வித தக­வ­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் பன்­னீர்­செல்­வம் தரப்பு கோப­ம­டைந்­துள்­ளது," என்று விவ­ர­ம­றிந்த நிர்­வா­கி­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.

இந்­தக் கோபத்­தின் வெளிப்­பா­டா­கவே, சென்னை முழு­வ­தும் பழ­னி­சாமி பதவி விலக வலி­யு­றுத்தி சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

தேர்­தல் தோல்­விக்கு பழ­னி­சாமி தரப்­பும் பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் கட்­சியைத் தன் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வர பழ­னி­சாமி முயற்சி செய்­வதை ஏற்க இய­லாது என்­றும் பன்­னீர்­செல்­வம் தரப்பு திட்­ட­வட்­ட­மாகக் கூறி­ய­தா­க­வும் அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!