உக்ரேன் எல்லையில் காத்துக் கிடக்கும் தமிழக மாணவர்கள்

சென்னை: தமி­ழக மாண­வர்­கள் சிலர் உக்­ரேன் நாட்­டில் இருந்து எப்­ப­டி­யா­வது வெளி­யேற வேண்­டும் என்ற தவிப்­பு­டன் அந்­நாட்­டின் எல்­லை­யில் காத்­துக் கிடக்­கின்­ற­னர்.

குமரி உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் உக்­ரேன் எல்­லை­யில் இருந்­த­படி, பெற்­றோ­ருக்­கும் உற­வி­னர்­க­ளுக்­கும் காணொ­ளிப்­ப­தி­வு­களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வரு­கின்­ற­னர்.

கும­ரி­யைச் சேர்ந்த 21 மாண­வர்­கள் எல்­லை­யில் இருந்து அனுப்­பிய காணொ­ளிப்­ப­தி­வு­கள் சமூக ஊட­கங்­க­ளி­லும் பகி­ரப்­பட்­டுள்­ளன.

பல மாண­வர்­கள் இரு தினங்­க­ளுக்கு முன்பே ரயில் மூலம் ருமே­னியா சென்­ற­டைந்­துள்­ள­னர் என்­றும் பலர் உக்­ரேன் எல்லை மூடப்­பட்­டி­ருப்­ப­தால் மேற்­கொண்டு என்ன செய்­வது என்று தெரி­யா­மல் அங்­கேயே சிக்­கித் தவிப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பெரும்­பா­லான மாண­வர்­கள் போர் நடப்பதால் அச்­சத்­து­டன் இருப்­ப­தா­க­வும் உண­வுக்கு என்ன செய்­வது என்று தெரி­யா­மல் தவிப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே, உக்­ரே­னில் உள்ள தமி­ழக மாண­வர்­க­ளி­டம் அங்­குள்ள நிலைமை குறித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் விசா­ரித்­தார்.

அப்­போது அனை­வ­ரும் தைரி­ய­மாக, பாது­காப்­பாக இருக்­க­வேண்­டும் என அவர் கூறி­னார்.

மாண­வர்­க­ளி­டம் காணொளி வசதி மூலம் அவர் சிறிது நேரம் உரை­யா­டி­ய­போது, அங்கு உணவு உள்­ளிட்­டவை கிடைக்­கி­றதா என­வும் கேட்­ட­றிந்­தார்.

அனை­வ­ரை­யும் மீட்க உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் முதல்­வர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!