உக்ரேனில் பாதாள அறைக்குள் பதுங்கியிருக்கும் தமிழக மாணவர்கள்

உக்ரேனில் பாதாள அறைக்குள் பதுங்கியிருக்கும் தமிழக மாணவர்கள்

2 mins read
746243d9-7a1e-4f9c-926e-7a9fa68a6fcd
மாணவனின் இந்த முயற்சியை பள்ளி ஆசிரியர்களும் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டினர். மாணவர்களுக்கும் உலக நடப்புகள் தெரிய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் பள்ளியில் சிரசாசனம் செய்யும் மாணவர் பிரவீன். படம்: தமிழக தகவல் ஊடகம் -

சென்னை: உக்­ரே­னில் எந்­நே­ர­மும் குண்­டு­கள் வெடிக்­கும் சத்­தத்­தைக் கேட்க முடி­வ­தா­க­வும் பாதாள அறைக்­குள் பதுங்கி இருப்­ப­தா­க­வும் அங்­குள்ள தமி­ழக மாண­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தற்­போது ஒரு­வேளை உணவு மட்­டுமே கிடைப்­ப­தா­க­வும் குடி­நீர் இன்றி சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மாண­வர்­கள் பலர் தங்­கள் பெற்­றோ­ரு­டன் பேசும் காணொ­ளிப் பதி­வு­கள் பல சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளன.

அதில் உக்­ரேன் எல்­லைப் பகு­திக்கு தங்­களை அழைத்­துச் செல்ல அங்­குள்ள இந்­திய தூத­ர­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் ரஷ்ய ராணு­வம் இடை­வி­டா­மல் நடத்­தும் தாக்­கு­தல் கார­ண­மாக இந்த முயற்­சி­யில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அம்­மா­ண­வர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"பேருந்­து­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­கின்­றன. எனவே போக்­கு­வ­ரத்து வாக­னங்­கள் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­ப­ட­லாம் என உக்­ரேன் மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.

"குண்­டு­கள் வெடிக்­கும்­போது அபாய ஒலி எழுப்­பப்­படும். அதைக் கேட்­ட­தும் நாங்­கள் அரு­கில் உள்ள பாதாள அறைக்­குள் சென்று பதுங்­கிக் கொள்­வோம்," என தமி­ழக மாண­வர்­கள் அச்சத்துடன் தெரி­வித்­துள்­ள­னர்.

இதனிடையே, உக்ரேனில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நாகை ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி மாணவர் பிரவீன் தொடர்ந்து சிரசாசனம் மேற்கொண்டார்.

ஆறாம் வகுப்பு படித்து வரும் பிரவீன், போர் வேண்டாம் என்று எழுதி வைத்து, அதன் அருகில் தொடர்ச்சியாக சிரசாசனம் செய்தும் தலைகீழாக நடந்தும் மாணவர்களிடையே போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும், போர் வேண்டாம். அமைதி வேண்டும் என்று முழக்கமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர்.