வேலுமணி உட்பட 6 அதிமுக எம்எல்ஏக்கள்மீது வழக்கு

கோவை: அதி­முக சார்­பில் கோவை­யில் நடைபெற்ற ஆர்ப்­பாட்­டம் தொடர்­பாக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி உள்­ளிட்ட எட்டு அதி­முக எம்­எல்­ஏக்­கள் மீது காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

சட்ட விரோ­த­மாக கூடி­யது, கொரோனா தொற்று வழி­காட்டி நெறி­மு­றை­களை மீறி, நோய்த்தொற்றைப் பரப்­பும் வகை­யில் செயல்­பட்­டது ஆகிய புகார்­க­ளின் பேரில் இந்த வழக்கு பதிவுசெய்­யப்­பட்­டுள்­ளது. காவல் உதவி ஆய்­வா­ளர் விக்­னேஷ் இப்­பு­காரை அளித்­துள்­ளார்.

வழக்­கு­க­ளைக் கண்டு தாம் ஒரு­போ­தும் அஞ்­சி­ய­தில்லை என எஸ்பி.வேலு­மணி தெரி­வித்­துள்­ளார். எத்­த­கைய குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் சட்­டப்­படி சந்­திக்க தாம் தயா­ராக உள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்ளார். முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­குமார் திமுக உறுப்­பி­னரை தாக்­கி­யது தொடர்­பான வழக்­கில் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரது கைதைக் கண்­டித்து அதிமுக சார்­பில் மாநி­லம் தழு­விய அளவில் நேற்று முன்­தி­னம் ஆர்ப்பாட்­டம் நடை­பெற்­றது. கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேலுமணி பங்கேற்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், வேலுமணி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!