உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி ஏற்பு; நாளை மறைமுக தேர்தல்

உடன்பாடு: மேயர் பதவி திமுகவுக்கு; மற்ற பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்ற அனைத்து கவுன்­சி­லர்­களும் நேற்று பத­வி­யேற்றுக் கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து நாளை மேயர், துணை மேயர், நக­ராட்­சித் தலை­வர்­கள் உள்­ளிட்ட பதவி இடங்­க­ளுக்­கான மறை­மு­கத் தேர்­தல் நடை­பெற உள்ளது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்தலில் இம்முறை திமுக அமோக வெற்றியைப் பதிவு செய்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் மொத்­தம் உள்ள 21 மாந­க­ராட்சி­க­ளை­யும் அக்­கட்சி கைப்­பற்றி உள்­ளது.

மொத்­தம் உள்ள 1,373 மாந­க­ராட்சி வார்­டு­கள், 3,843 நக­ராட்சி வார்­டு­கள், 7,621 பேரூ­ராட்சி வார்­டு­களில் வெற்றி பெற்­ற­வர்­கள் நேற்று பத­வி­யேற்­றுக் கொண்­ட­னர்.

ஒவ்­வொரு வார்டு கவுன்­சில­ரும் 35 விநா­டி­கள் கொண்ட உறு­தி­மொ­ழியை தனித்­த­னி­யாக வாசித்து பத­வி­யேற்­ற­னர்.

வெள்­ளிக்­கி­ழமை காலை மேயர் தேர்­த­லும், பிற்­ப­க­லில் துணை மேயர் தேர்­த­லும் நடை­பெ­றும் என்­றும் இதே­போன்று நக­ராட்சி, பேரூ­ராட்­சி­களில் தலை­வர், துணைத்­த­லை­வர் பத­விக்­கான தேர்வு நடை­பெ­றும் என்­றும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இம்­முறை உள்­ளாட்­சிப் பத­வி­களில் 50 விழுக்­காடு பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து அனைத்து உள்­ளாட்சி அமைப்­பு­க­ளி­லும் ஆண்­க­ளுக்கு சரி­ச­ம­மாகப் பெண்­களும் பொறுப்­பேற்­றுள்­ள­னர்.

இதற்­கி­டையே, மேயர், துணை மேயர், நக­ராட்­சித் தலை­வர் பதவி­க­ளுக்­கான மறை­மு­கத் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், திமுக தலைமை, தனது கூட்­ட­ணிக் கட்சி­களுடன் பத­விப் பகிர்வு குறித்து நேற்று தீவிர பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டது.

இம்­முறை அதி­க­மான இடங்­களில் வெற்றி பெற்­றதை அடுத்து, பெரும்­பா­லான பத­வி­களை தங்­கள் வசம் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என கட்­சித் தலை­மை­யி­டம் திமுக நிர்­வா­கி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

அதே சம­யம் கூட்­ட­ணிக் கட்சி­களோ மேயர், துணை மேயர் என அனைத்து பத­வி­க­ளை­யும் பிரித்­துக்­கொள்ள வேண்­டும் என கோரிக்கை விடுத்­துள்­ளன.

இதை­ய­டுத்து கூட்­ட­ணிக் கட்­சி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்­துள்­ளார் முதல்வர் மு.க.ஸ்டா­லின்.

முதற்­சுற்­றுப் பேச்­சு­வார்த்தை முடி­வ­டைந்த நிலை­யில், 21 மாந­க­ராட்­சி­க­ளின் மேயர் பத­வி­களை திமு­கவே வைத்­துக்கொள்­வது என்­றும் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான துணை மேயர், பேரூ­ராட்சி, நக­ராட்­சித் தலை­வர் பத­வி­களை கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு ஒதுக்கு­வது என்­றும் திமுக தலைமை முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

காங்­கி­ரஸ் தரப்­பில் சிவ­காசி மாந­க­ராட்சி மேயர் பத­வியை கோரி­உள்­ள­தா­கக் கூறப்­படும் நிலை­யில், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி கட­லூர் மேயர் பத­வியை கேட்­ட­தா­க­வும், தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்சி துணை மேயர் பத­வி­யைக் குறி­வைத்­துள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று மாலை திமுக கூட்டணிக் கட்­சி­க­ளி­டையே அடுத்த சுற்­றுப் பேச்­சு­வார்த்தை நடந்து முடிந்­திருப்ப­தா­கத் தக­வல்.

எனவே, பத­வி­க­ளைப் பகிர்ந்து கொள்­வது குறித்த அறி­விப்பு எந்த நேரத்­தி­லும் வெளி­யா­கக்­கூ­டும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!