அமைச்சர்: உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏற்பாடு

சென்னை: உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பும் தமி­ழக மாண­வர்­கள் தமி­ழ­கத்­தில் உயர்­கல்வி படிக்க உரிய ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும் என உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் பொன்­முடி தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், இது தொடர்­பாக முதல்­வர் முக.க.ஸ்டா­லி­னி­டம் கலந்­தா­லோ­சிக்­கப்­படும் என்­றார்.

"அம்­மா­ண­வர்­க­ளால் இங்கு உயர் கல்­வி­­யைத் தொடர்­வ­தற்­குரிய சூழல் இருந்­தால் அது கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்­றும் மாநி­லம் முழு­வ­தும் பொறி­யி­யல் கல்­லூ­ரி­களில் நிறைய இடங்­கள் உள்­ளன என்­றும் அவர் கூறி­னார்.

"நாடு திரும்­பிய மாண­வர்­கள் விரும்­பிய கல்­லூ­ரி­கள் கிடைக்கா­விட்­டா­லும், இருக்­கின்ற இடங்­களில் அவர்­களைச் சேர்த்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை தமி­ழக அரசு மேற்­கொள்­ளும்," என்­றார் அமைச்­சர் பொன்­முடி.

இதற்­கி­டையே, உக்­ரே­னில் இருந்து மீட்­கப்­பட்ட மேலும் 58 தமி­ழக மாண­வர்­கள் சென்னை வந்­த­டைந்­த­னர். பின்­னர் மாண­வர்­கள் அவ­ரவா் சொந்த ஊர்­க­ளுக்கு தமி­ழக அர­சின் ஏற்­பாட்­டில் பத்தி­ர­மாக அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

உக்­ரே­னில் இருந்து இது­வரை 88 தமி­ழக மாண­வர்­கள் நாடு திரும்பி­ உள்­ள­தாக அய­லக நலம், மறு­வாழ்வுத்­துறை அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!