நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் கைது

கோவை: நீதி­மன்ற வளாகத்­தில் நீதி­ப­தியை கத்­தி­யால் குத்­திய நீதி­மன்ற ஊழி­யர் கைது செய்­யப்­பட்­டார்.

அஸ்­தம் பட்­டி­யில் உள்ள சேலம் ஒருங்­கி­ணைந்த நீதி­மன்­றத்­தில் நீதித்­துறை நடு­வர் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­யா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் பொன்­பாண்டி.

45 வய­தான அவர் நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­துக்கு வந்து தமது வழக்­க­மான பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

அப்­போது அதே நீதி­மன்­றத்­தில் உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வரும் 37 வய­தான பிர­காஷ் அவ­ரைப் பார்க்க வந்­துள்­ளார்.

ஓம­லூர் நீதி­மன்­றத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த அவர், இட­மா­று­தல் ஆகி அஸ்­தம்­பட்டி நீதி­மன்­றத்­தில் அண்­மை­யில்­தான் பணிக்­குச் சேர்ந்­துள்­ளார்.

தமது பணி­யிட மாற்­றம் குறித்து நீதி­ப­தி­யி­டம் பேசிக்­கொண்­டி­ருந்த பிர­காஷ், திடீ­ரென ஆவே­ச­ம­டைந்­துள்­ளார் என்­றும் அப்­போது தாம் மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து நீதி­பதி பொன்­பாண்­டியை குத்­தி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதில் காய­ம­டைந்த நீதி­ப­தியை நீதி­மன்ற ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக சேலம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­த­னர். பிர­காஷ் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவர் எதனால் ஆவேசம் அடைந்தார், ஏன் நீதிபதியைத் தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!