முதல்வர் உத்தரவுப்படி பதவி விலகிய தலைவர்

திருத்துறைப்பூண்டி: தமி­ழ­கத்தில் நடைபெற்ற மறை­மு­கத் தேர்­த­லில், கூட்­டணி கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் திமு­க­வி­னர் போட்டியிட்டு வெற்­றி­பெற்ற நிலை­யில், அவர்­கள் தாமாகவே முன்வந்து பதவி வில­க­வேண்­டும்.பதவி விலகாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரிவித்திருந்தார்.

"போட்டி வேட்­பா­ளர்­க­ளின் செய­லால் நான் குற்ற உணர்ச்­சி­யால் குறுகி நிற்­கி­றேன்," என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், திருத்­து­றைப் பூண்டி நக­ர­மன்­றத் துணைத் தலை­வர் பத­விக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.எஸ். பாண்டியன் இப்பதவியில் இருந்து வில­கி­உள்ளதாக அறிவித்துள்ளார். இவர், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த இடத்தில் போட்டி­யிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

இதற்கிடையே, விசிக தலை­வர் திரு­மா­வ­ள­வன், மார்க்­சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய லாளர் பால­கி­ருஷ்­ணன் உள்­ளிட் டோர் அதி­ருப்தி தெரிவித்­த­னர்.

இதை­த்தொடர்ந்து, கட­லூர் மாவட்­டம், நெல்­லிக்குப்­பத்­தில் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யினர் சாலைமறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

இந்நிலையில், பதவி விலகும்படி முதல்வர் அறிவுறுத்தியதை அடுத்து, கூட்­டணி அறத்தைக் காக்கவேண்­டும் என்ற தமது கோரிக்­கையை திமுக ஏற்­ற­தற்கு திரு­மா­வ­ள­வன் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

"தனது செயல்­மூ­லம் கூட்­ட­ணியை உறுதி குலை­யா­மல் முதல்­வர் காத்­துள்­ளார்," என்­றும் திரு­மா­வ­ள­வன் பாராட்டியுள்ளார்.

மறை­முகத் தோ்தல் முடி­வு­களின்­படி 21 மாந­க­ராட்­சி­க­ளை­யும் திமுக கூட்­டணி தன்வச­மாக்­கி­யுள்­ளதாக தமிழக மாநி­லத் தோ்தல் ஆணை­யம் தகவல் வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!