செய்திக்கொத்து

10 கோடி மக்களுக்குத் தடுப்பூசி

சென்னை: இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாகவும் அந்த வரிசையில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை தமிழகத்தில் 10 கோடியே 30,346 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழகத்தில் 50,000 இடங்களில் 23வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

15 துப்பாக்கித் ேதாட்டா பறிமுதல்

சென்னை: மதுரைக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கிருஷ்ணகுமார், 37, என்ற பயணியிடம் 15 துப்பாக்கித் தோட்டாக்களை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

தான் ஒரு தொழிலதிபர் என்றும் முறையான உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளதாகவும் கைப்பையில் தோட்டாக்கள் இருந்ததைக் கவனிக்காமல் கொண்டு வந்துவிட்டதாகவும் கிருஷ்ணகுமார் கூறினார். விசாரணை தொடர்கிறது.

லஞ்சம் வாங்கிய இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு சிறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய மின் இணைப்பை வழங்க மின் பொறியாளர் தட்சணாமூர்த்தி, ராஜகோபால் ஆகிய இருவரும் ஆடவர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரகசிய சோதனையில், இருவரும் பணம் பெற்றபோது கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருவருக்கும் தலா ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 9 வரை தொடரும் கனமழை

சென்னை: தமிழகத்தில் இம்மாதம் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழையும் நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!