உத்தரப் பிரதேசத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­ல­த்­தில் இன்று இறு­திக்­கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து அங்கு அனைத்து அர­சி­யல் கட்­சி­களும் தீவிர இறு­திக்­கட்ட பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­ன.

நாட்­டின் மிகப்­பெ­ரிய மாநி­ல­மான உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் 400க்கும் மேற்­பட்ட சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் உள்­ளன.

அம்­மா­நி­லத்­தில் இருந்து 80 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தால் தேசிய கட்­சி­கள், மாநில கட்­சி­கள் அங்கு தங்­கள் செல்­வாக்கை அதி­க­ரிப்­ப­தில் தீவிர கவ­னம் செலுத்­து­வது வழக்­க­மாக உள்­ளது.

தற்­போது பாஜக ஆட்சி நடை­பெற்று வரும் நிலை­யில், இன்று உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஏழா­வது கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெ­று­கிறது.

இந்­நி­லை­யில், அம்­மா­நி­லத்­தில் பகு­ஜன் சமாஜ் கட்­சி­யின் இரும்பு ஆட்­சியை அமைக்­கும் நேரம் வந்­து­விட்­டது என அக்­கட்­சித் தலை­வர் மாயா­வதி தெரி­வித்­துள்­ளார்.

பாஜ­க­வின் மோச­மான ஆட்­சிக்கு உத்­த­ரப் பிர­தேச மக்­கள் முடிவு கட்­டி­யி­ருப்­பார்­கள் என சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, மீண்­டும் பெரும்­பான்மை பலத்­து­டன் பாஜக ஆட்சி அமைக்­கும் என முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் சூளு­ரைத்­துள்­ளார்.

இன்று உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஒன்­பது மாவட்­டங்­களில் உள்ள 54 தொகு­தி­களில் வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்­ளது. பதி­வான வாக்­கு­கள் வரும் 10ஆம் தேதி எண்­ணப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!