பங்குச் சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா கைது

புதுடெல்லி: தேசிய பங்­குச் சந்தை முறை­கேடு வழக்கு தொடர்­பில், முன்­னாள் தலை­மைச் செயல் அதி­காரி திரு­மதி சித்ரா ராம­கி­ருஷ் ணாவை சிபிஐ அதி­கா­ரி­கள் டெல்­லி­யில் ஞாயி­றன்று நள்­ளி­ர­வில் கைது செய்­த­னர்.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்த திரு­மதி சித்ரா ராம­கி­ருஷ்ணா 2003 முதல் 2016ஆம் ஆண்­டு­வரை தேசிய பங்­குச் சந்­தை­யின் நிர்­வாக இயக்­கு­நரா­க­வும் தலை­மைச் ெசயல் அதி­கா­ரி­யா­க­வும் பணி­யாற்­றி­னார்.

அப்­போது அவர், பல்­வேறு முறை­கே­டு­க­ளி­லும் ஈடு­பட்­டார் என இந்­தியப் பங்­கு­கள், பரி­வர்த்­தனை வாரி­யம் (செபி) குற்­றம்­சாட்­டி­யது.

முகம் தெரி­யாத இம­ய­மலை சாமி­யா­ரி­டம் பங்­குச் சந்தை குறித்த வணி­க­ரீ­தி­யி­லான திட்­டங்­கள், பங்­குச் சந்தை பற்­றிய முக்­கிய முன் கணிப்­புத் தர­வு­கள் ஆகி­ய­வற்றை சித்ரா ராம­கி­ருஷ்ணா பகிர்ந்து கொண்­ட­தும் செபி­யின் விசா­ர­ணை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்­தச் சாமி­யா­ரின் ஆலோ­ச­னைப்­படி, எந்த ஒரு முன் அனு­ப­வ­மும் இல்­லாத ஆனந்த் சுப்­பி­ர­மணி­யன் என்­ப­வரை தேசிய பங்­குச் சந்­தை­யின் தலைமை வியூக அதி­கா­ரி­யாக நிய­மித்து, இரண்டு ஆண்டு­களில் அவ­ருக்­குத் தொடர் ஊதிய உயர்­வு­கள் அளித்து நான்கு கோடி ரூபாய் ெதாகுப்­புச் சம்­ப­ளம் வழங்­கி­ய­தும் செபி­யின் விசா­ர­ணை­யில் அம்­ப­ல­மா­னது.

இது­போன்ற பல்­வேறு முறை­கே­டு­க­ளைச் செய்­துள்ள சித்ரா வுக்கு ரூ.3 கோடி ரூபா­யும் ஆனந்த் சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்கு ரூ.2 கோடி­யும் அப­ரா­தத் ெதாகை விதிக்­கப்­பட்­டது. ஐந்து ஆண்­டு­கள் கடந்த நிலை­யில் இவ்­வி­வ­கா­ரம் மீண்­டும் சூடுபிடித்­துள்­ளது.

தேசிய பங்­குச் சந்­தை­யின் விவ­ரங்­க­ளைக் கசிய விட்­ட­தாக எழுந்த குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில், முன்­னாள் தலை­மைச் செயல் அதி­கா­ரி­க­ளான சித்ரா ராம­கி­ருஷ்ணா, ரவி நரேன், ஆனந்த் சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகி­யோ­ருக்கு கடந்த 18ஆம் தேதி செபி நோட்­டீஸ் அனுப்­பி­யது.

தொடர்ந்து சென்னை உள்­பட நாடு முழு­வ­தும் சித்ராவுக்­குச் சொந்­த­மான வீடு­கள், கட்­ட­டங்க ளில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

இத­னி­டையே, சென்­னை­யில் கடந்த 25ஆம் தேதி ஆனந்த் சுப்­பி­ர­ம­ணி­யத்தைக் கைது செய்த சிபிஐ அதி­கா­ரி­கள் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இவ்­வ­ழக்­கில் முன் பிணை கோரி சித்ரா தாக்­கல் செய்­தி­ருந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதி­மன்­றம் சனி­யன்று தள்­ளு­படி செய்­ததை அடுத்து, டெல்­லி­யில் சித்ரா கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!