ரூ.1,100 கோடி பணப்பரிமாற்ற முறைகேடு: நால்வர் அதிரடிக் கைது

சென்னை: முறை­கே­டா­கப் பணப்­ப­ரி­மாற்­றத்­தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டின் பேரில் சென்­னை­யில் இயங்கி வரும் தனி­யார் நிறு­வ­னம் அம­லாக்­கத்­து­றை­யால் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர்­கள் நான்கு பேரை அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.

மொத்­தம் ரூ.1,100 கோடி அள­வுக்கு முறை­கே­டான பணப்­பரி­மாற்­றம் நடந்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சென்­னை­யில் 'டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்­தியா லிமி­டெட்' என்ற பெய­ரில் இயங்கி வந்த அத்­த­னி­யார் நிறு­வ­னம் அதிக வட்டி தரு­வ­தா­கக் கூறி, முத­லீ­டு­க­ளைப் பெற்­றுள்­ளது.

மேலும், நிறு­வ­னத்­தில் செலுத்­தப்­படும் தொகைக்கு ஏற்ப நிலம் தரு­வ­தா­க­வும் அறி­வித்து பொது­மக்­க­ளி­டம் இருந்து கோடிக்­க­ணக்­கில் பண வசூல் செய்­துள்­ளது என்­பது அம­லாக்­கத்­து­றை­யின் குற்­றச்­சாட்­டா­கும்.

பொது­மக்­கள் தரப்­பில் இருந்து இந்­நி­று­வ­னம் தொடர்­பாக பல்­வேறு புகார்­கள் எழுந்­ததை அடுத்து, தமி­ழக காவல்­து­றையின் பொரு­ளா­தா­ரக் குற்­றப்­பி­ரிவு வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்டது. பணப்­ப­ரி­மாற்­றம் தொடர்­பான புகார் என்­ப­தால் அம­லாக்­கத்­துறை­யும் இந்த வழக்­கில் கவ­னம் செலுத்­தி­யது.

பின்­னர் 1,100 கோடி ரூபாய் மதிப்­பி­லான பணப்­ப­ரி­மாற்­றம் முறை­கே­டாக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அந்­நி­று­வ­னத்­தின் நான்கு இயக்கு­நர் மீது வழக்­குப் பதி­வா­னது.

இதை­ய­டுத்து, நான்கு இயக்­கு­நர்­களும் உச்ச நீதி­மன்­றத்­தில் பிணை கோரி மனுத்­தாக்­கல் செய்­த­னர். ஆனால், அந்த மனுக்­கள் தள்­ளுப்­படி ஆயின.

மேலும், நான்கு பேரும் பிணை­யில் வெளி­வர இய­லாத வகை­யில் பிடி­யாணை பிறப்­பித்து சென்­னை­யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

அதன் பேரில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நான்கு பேரை­யும் கைது செய்­துள்ள நிலை­யில், அந்­நி­று­வ­னத்­தின் ரூ.207 கோடி மதிப்­பி­லான சொத்­து­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!