இளையர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தம்

லக்னோ: ஆங்­கி­லத்­தில் சர­ள­மாகப் பேச­வும் எழு­த­வும் தமி­ழக இளை­யர்­க­ளுக்கு சிறப்­புப் பயிற்­சி­கள் அளிக்­கப்­பட உள்­ள­தாக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழ­க­மும் சென்­னை­யில் உள்ள பிரிட்­டிஷ் கவுன்­சி­லும் ஒப்­பந்­தம் செய்து கொண்­டுள்­ளன.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலைமை­யில் இந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. இதன் மூலம் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் இளை­யர்­க­ளுக்­கும் ஆங்­கி­லத்­தில் பேச பயிற்சி அளிக்­கப்­படும்.

மேலும், நேர்­முக தேர்­வு­க­ளுக்கு இளை­யர்­கள் தங்­களை எவ்­வாறு தயார்ப்படுத்­திக்­கொள்ள வேண்டும் என்­பது குறித்­தும் தனித்­தி­றன்­களை எவ்­வாறு மெரு­கேற்­றிக் கொள்ள வேண்­டும் என்­றும் பயிற்சி அளிக்­கப்­படும் என அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"அறி­வு­சார் இலக்கு, தமிழ்­நாட்டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­துக்­கான வாய்ப்­பு­களைப் பெறும் வகை­யில், இளை­ஞர் சமு­தா­யத்­துக்கு திறன் பயிற்சி அளிக்­கப்­படும். உல­க­மெங்­கும் தடை­யின்றிச் செல்ல ஆங்­கில மொழி­யினை கற்று அறி­ய­வும், கல்வி கலாசாரத்தை ஒருங்­கிணைந்து வலுப்­படுத்­த­வும் பிரிட்­டிஷ் கவுன்­சி­லு­டன் இந்த புரிந்­து­ணர்வு மேற்­கொள்­ளப்­பட்டுள்ளது.

"இந்­தச் சிறப்புப் பயிற்சி தரமான கல்வி, அனைத்­து­லக தரத்­தி­லான மதிப்­பீ­டு­களை இளைய சமு­தா­யத்­துக்கு அளித்­திட வழி­வகுக்­கும்," என்று தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் கூறப்­பட்­டுள்ளது.

தமி­ழக இளை­யர்­க­ளின் பயிற்சிக்­காக இங்­கி­லாந்­தில் உள்ள புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­கள், உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து சிறப்­புப் பாடத்­திட்­டம் வடி­வ­மைக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்ள தமி­ழக அரசு, சிறப்­புப் பயிற்சி மூலம் தமி­ழக இளை­யர்­கள் பல்­வேறு திறன்­களை மேலும் மெரு­கேற்ற வழி­வகை செய்­யப்­படும் என்று கூறி­யுள்­ளது.

மேலும் இளை­ஞர்­க­ளின் உயர்­கல்வி, திறன் மேம்­பாடு, கலை, பண்­பாடு ஆகி­ய­வை­யும் வலுப்­படுத்­தப்­படும் என்­றும் அரசு மேலும் கூறி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தில் உள்ள இளம் தலை­மு­றை­யி­ன­ருக்­காக, குறிப்­பாக இளை­யர்­க­ளுக்­கான 'நான் முதல்­வன்' என்ற திட்­டத்தை அரசு செயல்­ப­டுத்த உள்­ளது.

அதன் ஓர் அங்­க­மாக தமி­ழக இளை­யர்­க­ளின் உயர் கல்­வியை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு தமிழ்­நாடு திறன் மேம்­பாட்டுக் கழ­க­மும் பிரிட்டிஷ் கவுன்­சி­லும் இணைந்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!