பெருங்கற்கால இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு

தி.மலை: பெருங்­கற்­கால வாழ்­விடங்­கள், தொழிற்­கூ­டங்­கள், ஈமச் சின்னங்­கள் ஆகி­யவை திரு­வண்ணா­மலை மாவட்­டம் வெடால் பகு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ளன.

அங்­குள்ள மாந்­தாங்­கல் என்ற கிரா­மத்­தில் திரு­வண்­ணா­மலை மர­பு­சார் அமைப்­பின் தலை­வ­ரும் வர­லாற்று ஆய்­வா­ள­ரு­மான ராஜ் பன்­னீர் செல்­வம் தலை­மை­யி­லான குழு­வி­னர், கடந்த சில தினங்­க­ளாக கள ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அக்­கி­ரா­மத்­தில் ஏரா­ள­மான பெருங்­கற்­கால சின்­னங்­கள் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். கிரா­மத்­தின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள மலை­ய­டி­வா­ரத்­தில் இரும்பு உருக்கு கழி­வு­களும் சுமார் நான்கு சென்­டி­மீட்­டர் சுற்­ற­ளவு கொண்ட இரு துண்டு குழாய்­களும் முதலில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இவை இரும்பு உலை­களை எரி­யூட்­டு­வதற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டவை என அவர் குறிப்­பிட்­டார்.

ஏரா­ள­மான கறுப்பு சிவப்பு பானை ஓடு­கள், இரும்பு, உருக்கு கழி­வு­கள் ஆகி­ய­வை­யும் அதி­கம் காணப்­படு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், பழங்­காலத்­தில் அங்கு வாழ்ந்த மக்­கள் இரும்புப் பொருள்­க­ளைத் தயா­ரிக்­கும் தொழிற்­கூ­டத்தை அமைத்­தி­ருக்க வேண்­டும் என்­றார்.

"சுமார் 2,500 ஆண்­டு­க­ளுக்கு முன் இங்கு இரும்பு காலத்­தில் வாழ்ந்த ஆதி­ம­னி­தர்­கள் வசித்­திருக்­கக்கூடும். அவர்­கள் இரும்பை உலை­யில் வைத்து தனி­யா­கப் பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்­க­ளைத் தயா­ரித்­துள்­ளதை அறிய முடி­கிறது. மேலும், ஏரா­ள­மான கல்­வட்­டங்­களும் காணப்­படு­கின்­றன," என்­றார் ராஜ் பன்­னீர் செல்­வம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!