'ஹிஜாப்' போராட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது வழக்கு

'ஹிஜாப்' போராட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது வழக்கு

1 mins read
cf081bdd-c120-4c0a-8874-f70168fbfc4e
-
Google News Preferred Icon

மதுரை: கல்விக் கூடங்களில் தலையங்கி ('ஹிஜாப்') அணிய தடைவிதித்த கர்நாடகா நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. தலையங்கி தடைக்கு எதிராக மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் இம்மாதம் 17ஆம் தேதி போராட்டம் நடை பெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கைக் குழு உறுப் பினரான ரஹமத்துல்லா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியபோது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரஹமத்துல்லா உட்பட மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூவரும் தேடப்பட்டு வருகின்றனர்.