அதிமுகவின் கே.பி. முனுசாமி தனியாக திடீர் உண்ணாவிரதம்

கிருஷ்­ண­கிரி: கிருஷ்­ண­கிரி சூள­கிரி பகு­தி­யில் அமை­ய­வி­ருக்­கும் சிப்­காட் தொழிற்­பேட்­டைக்கு விவ­சாய நிலங்­களை கைய­கப்­ப­டுத்­தும் முயற்சி எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இதனை கைவிட வேண்­டும் என்று அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் கே.பி முனு­சாமி திடீர் உண்­ணா­வி­ரத போராட்­டம் நடத்தி வரு­கி­றார்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம், வேப்­ப­ன­ஹள்ளி சட்­ட­மன்றத் தொகு­திக்கு உட்­பட்ட சூள­கிரி அருகே உள்ள உத்­த­னப்­பள்ளி பகு­தி­யில் ஓசூர் ஐந்­தா­வது சிப்­காட் வளா­கத்தை அமைக்க மத்­திய, மாநில அர­சு­கள் திட்­ட­மிட்­டுள்­ளன.

இதற்­காக, நாக­மங்­க­லம், உத்­த­னப்­பள்ளி, அய­ர­னப்­பள்ளி ஊராட்­சி­களில் உள்ள சுமார் 3,034 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பணி­யில் வரு­வாய்­ துறை அதி­கா­ரி­கள் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர்.

இந்­தப் பகு­தி­யில் சுமார் 5,000 தென்னை, மாந்­தோப்பு, 30க்கும் மேற்­பட்ட கோழிப்­பண்­ணை­கள், 100க்கும் மேற்­பட்ட பசு­மைக்­குடி என சுமார் 2,000 ஏக்­கர் நிலப் பரப்பு சிறு, குறு விவ­சா­யம் சார்ந்­துள்­ளது. சிப்­காட் அமைக்க விவ­சாய நிலங்­களை கைய­கப்­ப­டுத்­தும் முயற்­சியை கைவிட்டு ஏற்­கெ­னவே அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று, 4வது சிப்­காட் வளா­கங்­களில் காலி­யாக உள்ள 2,000 ஏக்­கர் நிலத்தை பயன்­ப­டுத்த வேண்­டும் என அப் பகுதி விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக, அப்­ப­குதி விவ­சா­யி­கள் கிருஷ்­ண­கிரி மாவட்ட ஆட்­சி­யர் ஜெய­சந்­திர பானு ரெட்டி யிடம் பல­முறை மனு கொடுத்­தி­ருப் பதாக தெரி­கிறது. இருந்­தா­லும் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் முயற்­சியை அரசு தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கிறது.

அத­னால், விவ­சா­யி­கள் தங்­க­ளது எதிர்ப்பை பதிவு செய்­யும் வகை­யில் பல்­வேறு கட்­டப் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் சூள­கிரி சிப்­காட் அமைக்க விவ­சாய நிலங்­களை கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை கைவிட வலி­யு­றுத்தி அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் வேப்­ப­ன­ஹள்ளி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கே.பி முனு­சாமி சூள­கிரி வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் முன்பு திடீர் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை தொடங்­கி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!