மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியது

மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மதுரையில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களின் பங்கேற்பு இன்றி கோவில் உள் வளாகத்திலேயே இந்த திருவிழா எளிமையாக நடந்தேறியது.

12 நாள்கள் நடைபெற உள்ள திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேசு வரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்.

எதிர்வரும் 12ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக்கு விஜயமும் நடைபெறும்.

தெற்கு கோபுரம் வழி யாக தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதையடுத்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையின் கண் காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான காவலர்களும் அதிகாரிக ளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகு நடை பெறும் திருவிழா என்பதால் மதுரை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அடுத்த சில தினங்களுக்கு மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் மதுரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!