ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கண்டனம்

பெங்­களூரு: ஒற்றை மொழி என்­பது ஒற்­று­மைக்கு உத­வாது என்­றும் ஒற்­றைத்­தன்மை என்­பது ஒரு­மைப்­பாட்­டை­யும் உரு­வாக்­காது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரிவித்­துள்­ளார்.

'இந்தி மாநி­லம்' போதும், இந்­திய மாநி­லங்­கள் தேவை­யில்லை என்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா நினைக்­கி­றாரா? என்­றும் அவர் கேள்வி எழுப்பி உள்­ளார்.

இந்­தி­யா­வில் ஆங்­கி­லத்­துக்கு மாற்­றாக இந்தி மொழியை அலு­வல் மொழி­யாக ஏற்க வேண்­டும் என்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார்.இதற்கு தமி­ழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்­துள்­ளது. ஆங்­கி­லத்­துக்கு மாற்­றாக இந்தியைக் கொண்­டு­வ­ரக் கூடாது என்று தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி, பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் உள்­ளிட்­டோர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

"ஆங்­கி­லத்­துக்­குப் பதி­லாக இந்தி­யைப் பயன்­ப­டுத்­துங்­கள் என்று மத்­திய அமைச்­சர் அமித்ஷா சொல்­வது இந்­திய ஒரு­மைப்­பாட்­டுக்கு வேட்டு வைக்­கும் செயல். நாட்­டின் பன்­மு­கத்­தன்­மை­யைப் பழு­தாக்­கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்­கிறது.

"ஒரே தவற்­றைத் திரும்­பத் திரும்­பச் செய்­கி­றீர்­கள். ஆனால், அதில் நீங்­கள் வெற்றி பெற மாட்­டீர்­கள்," என்று முதல்­வர் ஸ்டா­லின் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி கூறு­கை­யில், உள்­துறை அமைச்­சர் அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்­க­ள் மத்தியில் மிகுந்த கொந்­த­ளிப்­பை­யும் பதற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தியைத் திணிப்­ப­தில் பாஜக தொடர்ந்து தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக அவர் சாடி­யுள்­ளார்.

"இது இந்­தி­யா­வின் ஒற்­று­மைக்கு உலை வைக்­கும் செய­லா­கும். இந்தி பேசாத மாநி­லங்­களில் உள்ள மக்­கள் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரண்டு கடு­மை­யான போராட்­டத்தை நடத்த வேண்­டிய நிலை உரு­வா­கும்," என கே.எஸ். அழ­கிரி எச்­ச­ரித்­துள்­ளார்.

பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் விடுத்­துள்ள அறிக்­கை­யில், அமித்ஷாவின் பேச்சு தமக்கு அதிர்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்தி இந்­தி­யா­வில் சற்று அதிகமாகப் பேசப்­படும் மொழி. அதற்­கா­கவே அதை மற்ற மாநி­லங்­கள் மீது திணிக்­கக் கூடாது என்­ப­து­தான் சுமார் 85 ஆண்டு­க­ளாக இந்தி பேசாத மாநி­லங்­கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுத்­தான் ஆங்­கி­லம் இணைப்பு மொழி­யா­கத் தொடர முன்­னாள் பிர­த­மர் நேரு அனு­ம­தித்­தார் என்பது வர­லாறு," என்று ராம­தாஸ் கூறி­உள்­ளார்.

ஒரே நாடு ஒரே மொழி என கூறிக்கொண்டு இந்திதான் தேசிய மொழி என பாஜக கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

"அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி. அப்படி இருக்கும் போது இந்தி மொழிக்கு அடிபணிந்து அடிமை வேஷம் போடுவது ஏன்?," என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

'தந்திரங்களை மக்கள் வெல்வார்கள்'

புதுடெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி தொடர்பான கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன், தமது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அதில் மத்திய அரசின் தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அரியணையில் யார் உட்காரு வது ஆங்கிலமா, இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே என்பதுதான்.

"இந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும் ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்," என்று சு.வெங்கடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!