கிடுகிடுவென விலை உயரும் எலுமிச்சை

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எலுமிச்சம் பழத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வெயிலுக்கு இதம் தரும் எலுமிச்சை பழரசத்தை பலரும் விரும்பி அருந்துவதால், இப் பழத்துக்கான தேவை அதிகரித்து உள்ளதுடன் அதன் விலையும் தாறுமாறாக உச்சத்தைத் தொட்டுள்ளது.

தற்போதைய விலை உயர்வுப் போரில் பெட்ரோல், தங்கத்துடன் எலுமிச்சையும் போட்டியிடத் தொடங்கியுள்ள தாகவும் ஒரு சில ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்ட எலுமிச்சை இப்போது ரூ.350 வரை விற்கப்படுகிறது. ஒரு பழத்தின் விலை ரூ.10 முதல் ரூ.15ஆக உள்ளது.

உலகில் விளையும் எலுமிச்சையில் 17%ஐ இந்தியா உற்பத்தி செய்கிறது. நாடு முழுவதும் 317,000 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை பழத்தோட்டங்கள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை அதிகம் விளைகிறது. பருவம் தவறிய மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதும் எலுமிச்சை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!