நாளை தொடங்குகிறது ‘அக்னி நட்சத்திரம்’

சென்னை: தமி­ழ­கத்­தில் வெயி­லின் தாக்­கம் தொடர்ந்து அதி­க­ரித்து வந்த நிலை­யில், அதன் உச்­ச­மாக நாளை அக்னி நட்­சத்­திர காலம் தொடங்க உள்­ளது.

வழக்­கம்­போல் இந்த ஆண்டு கோடைக் காலத்­தில் தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் வெயில் தகிக்­கிறது. நேற்று முன்­தி­னம் 13 இடங்­களில் நூறு டிகிரி வெயில் பதி­வா­னது.

அக்னி நட்­சத்­தி­ரம் எனப்­படும் கத்­திரி வெயில்­கா­லம் தொடங்­கி­ய­தும் பெரும்­பா­லான பகு­தி­களில் நூறு டிகி­ரிக்­கும் அதி­க­மான வெயில் பதி­வா­கலாம் என நிபு­ணர்­கள் கணித்­துள்­ள­னர்.

நாளை தொடங்­கும் கத்­திரி வெயில் வரும் 24ஆம் தேதி வரை நீடிக்­கும் எனத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், அடுத்த இரு தினங்­க­ளுக்கு பல்­வேறு மாவட்­டங்­களில் இயல்­பை­விட ஐந்து டிகிரி கூடு­தல் வெப்­பம் பதி­வா­கும் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

நேற்று முன்­தி­னம் மாலை நில­வ­ரப்­படி திருச்சி, மதுரை, காஞ்­சி­பு­ரம், கரூர், சேலம், தர்­ம­புரி, தஞ்­சா­வூர் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் நூறு அல்­லது அதற்­கும் அதி­க­மான வெப்ப நிலை பதி­வா­னது.

அக்னி நட்­சத்­தி­ரத்­தின்­போது பக­லில் அனல்­காற்று வீசும் என்றும் இர­வில் புழுக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்­றும் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். கூடு­மா­னவரை வெளியே செல்­வதைத் தவிர்க்கவேண்­டும் இள­நீர், மோர் உள்­ளிட்ட இயற்கை பானங்­களை அவ்­வப்­போது அருந்­து­வது நல்­லது என்­றும் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, கோடை கால நோய்­கள் தொடர்­பான அவ­சர உத­விக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்­ள­லாம் என்று தமி­ழக சுகா­தா­ரத்­துறை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!