2023 ஏப்ரலுக்குள் திருச்சியில் புதிய விமான முனையம் திறப்பு

ரூ.951 கோடி செலவில் நவீன வசதிகளுடன் செயல்பாட்டுக்கு வரும்

திருச்சி: திருச்சி விமான நிலை­யத்­தில் அமைக்­கப்­படும் புதிய முனை­யம் எதிர்­வ­ரும் 2023ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்­குள் திறக்­கப்­படும் என்று மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கான பணி­கள் துரித கதி­யில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் புதிய முனை­யக் கட்­ட­டம் ரூ.951.28 கோடி­யில் கட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் இது நாள்­தோ­றும் சுமார் 2,900 பய­ணி­க­ளைக் கையா­ளும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்டு நெரி­ச­லற்ற நிலை­யாக மாற்­றும் வகை­யில் கட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

சுமாா் 75,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் கட்­டப்­படும் புதிய முனை­யக் கட்­ட­ட­மா­னது தென்­னிந்­திய கட்­ட­டக் கலை­யின் அடை­யா­ளங்­க­ளைத் தாங்கி நிற்­கும் என்­றும் கட்­ட­டத்­தின் உட்­பு­றம் திருச்சி நகர வாழ்க்கை முறை­க­ளை­யும் கலா­சா­ரத்­தை­யும் சம­கால முறை­யில் பிர­தி­ப­லிக்­கும் என்­றும் அந்த அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, திருச்சி விமான நிலைய விரி­வாக்­கப் பணி­களை பிர­த­மர் மோடி தொடங்கி வைத்­தார். இதை­ய­டுத்து, இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­யம் இந்­தப் பணியை மேற்­கொண்டு வரு­கிறது.

"விமா­னங்­கள் நிற்­ப­தற்­கான புதிய (ஏப்­ரான்) பகு­தி­கள், விமா­னங்­க­ளின் அள­வு­க­ளுக்கு தகுந்­த­வாறு அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஏப்­ரா­னுக்­கும் விமான ஓடு­த­ளத்­திற்­கும் இடை­யே­யான பாதை (டாக்சி வேஸ்), கட்­டுப்­பாட்டு அறை­கள், ரேடாா், வானிலை ஆய்வு மையம் ஆகிய வச­தி­களை இந்­தப் புதிய முனை­யம் கொண்­டி­ருக்­கும்.

"மேலும், புதிய முனை­யத்­தை­யும் நக­ரத்­தை­யும் இணைக்­கும் நான்கு வழி அணு­கல் சாலையை அமைப்­ப­தும் விரி­வாக்­கப் பணி­களில் இடம்­பெற்­றுள்­ளது," என்று விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தற்­போது இந்­தப் பணி­களில் 75 விழுக்­காடு முடிந்­துள்­ள­தா­க­வும் எதிர்­வ­ரும் 2023 ஏப்­ரல் மாதத்­துக்­குள் புதிய முனை­யம் முழு­மை­யா­கத் தயா­ரா­கி­வி­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் சென்னை, கோவை ஆகிய நக­ரங்­களை அடுத்து, திருச்சி விமான நிலை­யத்­தில் இருந்­தும் அனைத்­து­லக விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வரு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து, திருச்சி விமான நிலை­யத்­தில் பய­ணி­க­ளின் நெரி­ச­லைக் குறைப்­ப­தற்­காக புதிய விமான முனை­யம் அமைக்க முடிவு செய்­யப்­பட்­டது.

இதன்­படி, 48 பயண பரி­சோ­தனை மையங்­கள், பய­ணி­கள் விமா­னத்­திற்­குள் செல்­வ­தற்­கான பத்து இணைப்­புப் பாலங்­கள் ஆகி­ய­வற்­று­டன் எரி­சக்தி சேமிப்­பு­டன் நீடிக்­க­வல்ல சிறப்­பம்­சங்­களையும் கொண்டதாக புதிய முனை­யம் அமைக்­கப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!