மு.க.ஸ்டாலின்: கடல் கடந்து வாழும் தமிழர் அல்லாதோருக்கும் தமிழக அரசு உதவும்

சென்னை: கடல் கடந்து வாழும் தமி­ழர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, தமி­ழர் அல்­லா­தோ­ருக்­கும் உத­வும் அர­சாக திமுக அரசு செயல்­பட்டு வரு­கிறது என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், ஆட்­சி­யில் இல்லை என்­றா­லும்­கூட, தமி­ழ­கத்­துக்­கா­க­வும் தமி­ழர்­க­ளுக்­கா­க­வும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்­துக் கொண்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"என­வே­தான் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் இலங்­கைத் தமிழ் மக்­க­ளுக்கு தமி­ழக அர­சின் சார்­பில் அரிசி அனுப்ப வேண்­டும் உதவிப் பொருள்­கள் அனுப்பி வைக்க வேண்­டும் என்­றும் பிர­த­மரை நேரில் சந்­தித்­த­போது சொன்­னேன்.

"இலங்­கைத் தமிழர்களுக்கு வேண்­டிய முடிந்த அள­வுக்கு உதவி­க­ளைச் செய்ய வேண்­டும் என முடி­வெடுத்து, மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரைச் சந்­தித்­த­போ­தும் வலி­யு­றுத்­தி­னேன்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

இப்­போது மத்­திய அர­சி­டம் இருந்து, தாங்­களே உதவி செய்­யக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் உத­வி­க­ளைத் தாரா­ள­மாக அனுப்­புங்­கள் என்­றும் செய்தி வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், இலங்­கை­யில் இருக்­கும் தமி­ழர்­கள் மட்­டு­மல்­லா­மல், அங்­குள்ள அனைத்து மக்­க­ளுக்­கும் தமி­ழக அரசு துணை நிற்­கும் என்று கூறி­யுள்­ளார்.

இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உதவி கரங்­களை நீட்­டி­யி­ருப்­பது மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் அளிப்­ப­தாக இலங்­கை­யின் நுவ­ரெ­லியா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் இலங்கை அமைச்­ச­ரு­மான ஜீவன் தொண்­ட­மான் தெரி­வித்­துள்­ளார்.

"தமி­ழக முதல்­வர் இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அந்த உத­வியை மொத்த இலங்கை மக்­க­ளுக்­கும் செய்­தி­ருக்­கி­றார். இந்த நன்­றியை என்­றும் நாங்­கள் மறக்­க­மாட்­டோம்.

"ரூ. 80 கோடியில் சுமார் 40,000 டன் அரிசி, ரூ. 78 கோடி­யில் மருந்­து­கள், ரூ.15 கோடி­யில் பால் மாவு உள்ளிட்ட உதவிகளை அவர் அறிவித்திருக்கிறார். அவ­ருக்கு நன்றி," என ஜீவன் தொண்­ட­மான் கூறி­யுள்­ளார்.

இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் நெருக்­க­டி­யி­லி­ருந்து மக்­களை மீட்­க­வும் உதவி செய்­ய­வும் தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றிய முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு சார்­பாக நன்றி தெரி­விப்­ப­தாக யாழ்­ப்பா­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ம.ஆ.சுமந்­தி­ரன் கூறி­யுள்­ளார்.

"இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவி செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் பணிவுடன் தெரிவித்தோம்.

"அதைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, மிகப்பெரிய உதவியை இந்திய அரசு மூலமாக இலங்கைக்கு அனுப்புவதற்காக உடன்பிறவா சகோதரரான உங்களுக்கு நன்றி," என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!