இரு மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்துதர உத்தரவு

நாமக்­கல்: நாமக்­கல் மாவட்­டம், போத­மலை பழங்­குடி இன மக்­க­ளுக்குச் சாலை வசதி ஏற்­ப­டுத்­தித் தர உச்ச நீதி­மன்­றம் தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

புதுப்­பட்டி முதல் போத­மலை கிரா­மம் வரை சாலை அமைப்பதற்கு ஏதுவாக பாது­காக்­கப்­பட்ட வனப்­பகு­தி­யில் உள்ள 102 மரங்­களை வெட்ட அனு­மதிக்கக் கோரி, போத­மலை ஊராட்சி மன்றக் கவுன்­சிலர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு தள்­ளுபடி செய்­யப்­பட்­டது.

இதனை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் அவர் தாக்­கல் செய்­துள்ள மனு­வில், சாலை வசதி இல்­லா­த­தால் இந்­தப் பகு­தி­களில் விளை­யும் பொருள்­களை ெவளி­யூர்­க­ளுக்குக் கொண்டு செல்ல முடி­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. மேலும் 26 கி. மீட்­டர் தொலை­வில் உள்ள மருத்­து­வ­மனைக்கு நடந்து செல்லவேண்­டிய அவ­லம் உள்­ள­தால் சாலை அமைத்­துத் தரவேண்­டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

சாலை வசதி செய்து தந்­தால், மலைக்­கி­ரா­மங்­கள் வளர்ச்சி பெறும் என்­ப­தால் 2.71 ஹெக்­டேர் பகு­தி­யில் உள்ள 102 மரங்­களை வெட்ட அனு­மதி அளிக்­க­வேண்­டும் என்று கூறப்­பட்­டது.

இந்த மனு குறித்து விசா­ரித்த நீதி­பதி திரு நாகேஸ்­வர ராவ் தலை­மை­யி­லான அமர்வு, "நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்­லாத நாமக்­கல் மாவட்­டத்­தில் உள்ள இரண்டு மலைக் கிரா­மங்­க­ளுக்கும் உட­ன­டி­யாக சாலை வசதி அமைத்துத் தரவேண்­டும்," என தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்­டது.

வெட்­டப்­பட்ட மரங்­க­ளுக்­கான இழப்­பீட்­டுத் தொைகயை தமி­ழக அரசே வனத்­து­றைக்கு வழங்க வேண்­டும் என்­றும் வெட்­டப்­படும் மரங்­க­ளுக்கு ஈடாக ஆயி­ரக்­கணக்­கான மரக்­கன்­று­களை நட­வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்டு வழக்கை நீதி­ப­தி­கள் முடித்து வைத்­த­னர்.

இந்நிலையில், மாநி­லப் பொரு­ளா­தா­ரத்­தின் அடிப்­ப­டை­யில் தமி­ழ­கத்­தின் மலைக் கிரா­மங்­க­ளுக்குச் சாலை வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று பொதுப் பணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு ெதரி­வித்­துள்­ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் நிறை வேற்றப்படும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!