மாணவர்களைக் கணிதத் தேர்வுக்கு தயாராக்கும் ஆசிரியர்

கோவை: கணித ஆசிரியர் ஒருவர், பிளஸ்-2 மாணவர்களை கணிதத் தேர்வுக்கு யூடியூப் மூலம் தயார்ப் படுத்தி வருகிறார்.

கோவை. காளப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த முதுகலை கணித ஆசிரியர் தமிழ் செல்வன், கட்டணம் செலுத்தி டியூசன் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யூடியூப் மூலம் பிளஸ்-2 பாடங்களைப் பதிவேற்றம் செய்து வருகிறார். அதன்படி, தற்போது 12ஆம் வகுப்பு புத்தகம் அனைத்தும் காணொளியாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தக் காணொளிகள் மூலம் நேரடி வகுப்பில் பங்கேற்கும் அனுபவம் கிடைப்பதாகவும் மிகவும் பலன் தருவதாக உள்ளதாகவும் அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவிர, சுமார் 14,000 மாணவர்கள் இவரின் காணொளியைப் பார்த்து பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் தமிழ் செல்வன் கூறுகையில், "பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கணிதப் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கணிதப் பாடங்கள் குறித்த வீடியோவை 'maths simplified tamil' என்ற யூடியூப் ஒளிவழியில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வரை சுமார் 800 காணொளிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!