ரூ.400 கோடி மோசடி செய்த தம்பதியர்க்கு வலைவீச்சு

கோவை: அன்­னியச் செலா­வணி வர்த்­த­கத்­தில் பணத்தை முத­லீடு செய்­தால் பெரும் லாபம் காண­லாம் என்று ஆசை வார்த்­தை­க­ளைக் கூறி பல­ரி­டம் பணம் பெற்று ரூ.400 கோடி மோசடி செய்த தம்­ப­தி­யரை கோவை காவல்­து­றை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.

கோவை மாவட்­டம் சுந்­த­ரா­புரத்­தைச் சேர்ந்த விமல் குமார், ராஜேஸ்­வரி தம்­ப­தி­யர் 'ஆல்ஃபா பாரெக்ஸ் மார்க்­கெட்ஸ்' என்ற பெய­ரில் நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வந்­த­னர்.

மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­குச் சென்று நிதி முத­லீடு, அன்­னியச் செலா­வணி வர்த்­த­கம் தொடர்­பாக விளக்­கக்­கூட்­டங்­களை நடத்தி வந்த இவர்­க­ளுக்கு முத­லீடு செய்­வ­தில் ஆர்­வம் கொண்­டுள்ள ஏரா­ள­மா­னோர் அறி­மு­க­மா­கி­னர்.

அவர்­க­ளி­டம், ஒரு லட்­சம் முத­லீடு செய்­தால், பத்து மாதங்­க­ளுக்கு தொடர்ந்து ரூ.18,000 வழங்­கப்­படும் என்று இத்­தம்­ப­தி­யர் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், முத­லீட்­டா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால் பத்து மாதங்­க­ளுக்கு ரூ.2,000 தொடர்ந்து வழங்­கப்­படும் என்­றும் கூறி­யுள்­ள­னர்.

இந்த அறி­விப்­பு­க­ளால் கவ­ரப்­பட்ட ஏரா­ள­மா­னோர், இத்­தம்­ப­தி­யரை நம்பி பல லட்­சம் ரூபாய் முத­லீடு செய்­யத் தொடங்­கி­னர்.

குறு­கிய லாபத்­தில் 400 கோடி ரூபாய் அளவு திரட்­டிய விமல் குமார், ராஜேஸ்­வரி தம்­ப­தி­யர், தாங்­கள் அறி­வித்­த­படி, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அசல், வட்டி, ஊக்­கத்­தொகை என எது­வும் தரா­மல் திடீ­ரென தலை­ம­றை­வா­கி­னர்.

அவர்­க­ளது வீடு, அலு­வ­ல­கம் பூட்­டி­யி­ருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 250க்கும் மேற்­பட்ட முத­லீட்­டா­ளர்­கள் காவல்­து­றை­யி­லும் கோவை ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தி­லும் புகார் அளித்­த­னர்.

இதை­ய­டுத்து காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டுள்ள நிலை­யில், விமல் குமார் தம்­ப­தி­யர் வெளி­நாட்­டுக்கு தப்­பிச் சென்­றி­ருக்­கக்­கூ­டும் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

தலை­ம­றை­வான பின்­ன­ரும் 'மிஸ்டர் மணி' என்ற 'யூடியூப்' சேனலை விமல் குமார் தொடர்ந்து நடத்தி வரு­வ­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!