ஓய்வு: அரசுக்கு நிதிச்சுமை; ஊழியர்களுக்கு பணிச்சுமை

சென்னை: தமி­ழ­கத்­தில் 60 வயது நிறை­வ­டைந்த அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் உட்­பட பல்லாயிரம் பேர் செவ்­வாய்க்­கி­ழ­மை­யு­டன் (மே 31) ஓய்வுபெற்­ற­னர். இவர்­களில் அரசு ஊழி­யர்­கள் மட்­டும் 5,286 பேர். இவ்­வாண்­டில் மேலும் 15,000 அரசு ஊழி­யர்­கள் ஓய்வு பெற உள்­ள­னர். அத­னால் அவர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய ஓய்­வூ­தி­யத் தொகை ரூ.40,000 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் அரசு ஊழி­யர்­

க­ளின் ஓய்­வு­பெ­றும் வய­தாக 58ஆக இருந்து வந்­தது. கொரோனா தொற்று பர­வத்­தொ­டங்­கி­ய­தை­­அடுத்து முழு ஊரடங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. இத­னால் அர­சின் வரு­வாய் குறைந்­தது.

அர­சுப் பணி­யில் இருந்து ஓய்வு பெறு­ப­வர்­க­ளுக்கு ஓய்­வூ­திய பலன்­களை கொடுப்­ப­தற்கு நிதி இல்­லாத சூழல் அர­சுக்கு ஏற்­பட்­டது. எனவே, ஓய்­வு­பெ­றும் அரசு ஊழி­யர்­க­ளுக்­கான வயது 58லிருந்து 59ஆக கடந்த 2020 மே மாதம் உயர்த்­தப்­பட்­டது.

பின்­னர், இது 60 வய­தாக மீண்­டும் உயர்த்­தப்­பட்­டது. ஓய்­வு­பெ­று

­ப­வர்­க­ளின் வயது உயர்த்­தப்­பட்­ட­தால் புதி­தாக இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­வது தடைப்­பட்­டது. அர­சின் இந்த முடிவு விமர்­ச­னத்­துக்குள்­ளா­னது.

தற்ேபாது பல்­லா­யி­ரம் பேர் ஓய்வு­ பெற்­றுள்­ள­தால் காலி­யாக உள்ள அரசு பணி­யி­டங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

தமி­ழக அர­சுத் துறை­களில் 14 லட்­சம் முதல் 15 லட்­சம் வரை­யி­லான அரசு ஊழி­யர்­கள் பணி­யில் இருக்க வேண்­டி­யது. ஆனால், தற்­போது 9 லட்சம் பேர்­தான் பணி­யில் உள்­ள­னர். எனவே தற்­

போ­தைய ஊழி­யர்­க­ளின் பணிச்­சுமை அதி­க­ரித்­துள்­ள­தாக ஒரு தக­வல் தெரி­விக்­கிறது.

2022-23 நிதி­நிலை அறிக்­கை­யின்­படி, இரண்­டாண்டு காலம் ஓய்வு வயது நீட்­டிக்­கப்­ப­டா­மல் இருந்­தி­ருந்­தால் 26,410 கோடி ரூபாய் மட்­டுமே ஓய்­வூ­தி­யத்­திற்­காக அர­சாங்­கம் செல­விட வேண்டி இருந்­தி­ருக்­கும்.

ஆனால், தற்­போது 13,000 கோடி ரூபாய் செலவு கூடி­யுள்­ளது.

மொத்­த­மாக இவ்­வாண்­டில் ஓய்வுபெறு­வோ­ருக்­காக அரசு செல­ விட வேண்­டிய தொகை ரூ.39,508 கோடி என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!