சசிகலா வந்தால் பாஜக வளரும்; அவரை வரவேற்போம்: நயினார்

புதுக்­கோட்டை: பாஜ­க­வில் சசி­கலா சேர்ந்­தால் வர­வேற்­போம் என்­றும் அவ­ரது வருகை பாஜக வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் என்­றும் தமி­ழக சட்­ட­மன்ற பாஜக தலை­வர் நயி­னார் நாகேந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

புதுக்­கோட்­டை­யில் நேற்று நடை­பெற்ற ஒரு திரு­மண விழா­வில் கலந்­து­கொள்ள வந்த அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"அதி­மு­க­வில் சசி­க­லாவை சேர்த்­துக் கொண்­டால் அக்­கட்சி வள­ரும். அக்­கட்­சி­யில் அவரை சேர்த்­துக் கொள்­ளா­த­பட்­சத்­தில் பாஜகவில் சசி­கலா சேர்ந்­தால் நாங்­கள் அவரை வர­வேற்­போம். அது பார­திய ஜனதா கட்­சி­யின் வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்­கும். இதற்­கான முயற்­சி­களை நாங்­கள் எடுத்து வரு­கி­றோம்," என்­றார் நயி­னார் நாகேந்­தி­ரன்.

மேலும் அவர் கூறு­கை­யில், "கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு மத்­திய அரசு ஏன் பெட்­ரோல், டீசல் விலை­யைக் குறைக்­க­வில்லை என்று திமுக கூறி­யது. ஆனால் இரண்டு முறை பெட்­ரோல், டீசல் விலையை மத்­திய அரசு குறைத்­து­விட்­டது, இருப்­பி­னும் தமி­ழக அரசு விலையைக் குறைக்­கத் தயா­ராக இல்லை.

"பெய­ர­ள­விற்கு பெட்­ரோல் விலையை மட்­டும் சிறிது குறைத்து­ விட்டு அவர்­கள் கொடுத்த தேர்­தல் வாக்­கு­று­தியைக் காற்­றில் பறக்­க­விட்டு வரு­கின்­ற­னர்.

"திமுக தன்னைப் பெரு­மைப்­

ப­டுத்­திக்கொள்­வதை முன்­னெ­டுத்­துச் செல்­கி­றதே தவிர, மக்­கள் பிரச்­சி­னையை, மக்­க­ளுக்கு நல்­லது செய்ய வேண்­டும் என்ற கருத்தை அவர்­கள் முன்­னெ­டுக்­க­வில்லை," என்றார் நயினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!