கொள்ளைபோன 6 கிலோ தங்க நகைகள்; ரூ.14 லட்சம் ரொக்கம்

தஞ்சாவூர்: தான் கொண்டு சென்றிருந்த பையை தனது அருகில் வைத்துக்கொண்டு தஞ்சாவூரில் உள்ள உணவுக் கடை ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார் நகை மொத்த வியாபாரி ஒருவர். அப்போது, 6 கிலோ தங்க நகைகளையும் ரூ.14 லட்சம் ரொக்கத்தையும் ஒரு திருட்டுக் கும்பலிடம் பறிகொடுத்துவிட்டு தவிப்புக்கு ஆளானார்.

ஹோட்டலில் இருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, வெள்ளைச் சட்டை, கறுப்பு நிற பேன்ட் அணிந்த ஒன்பது பேர் ஹோட்டலுக்கு வந்து நகைளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவர் மணி, 52. நகை மொத்த வியாபாரியான இவர், நேற்று முன்தினம் காலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூரில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை எடுத்து வந்துள்ளார். நகைகளைக் கடைகளில் கொடுத்து விட்டு, பணத்தை வசூல் செய்துள்ளார். அன்று இரவு பழைய பேருந்து நிறுத்தகத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அப்போது, அவரது அருகில் சிலர் கை கழுவுவது போலவும் உணவு பார்சல் வாங்குவது போலவும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். கை கழுவ எழுந்த மணி, நகையும் பணமும் பறி போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!