கோவில் விழாக்களில் ஆடல், பாடலுக்கு அனுமதி இல்லை

மதுரை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கோவில் விழாக்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்த விழாக்­க­ளின்­போது ஆடல், பாடல் நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

இந்த நிகழ்ச்­சி­க­ளுக்கு அனு­மதி வழங்­கக்­கோரி, சென்­னை­யி­லும் மதுரை உயர் நீதி­மன்றக் கிளை­யிலும் நூற்­றுக்­க­ணக்­காக மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

அவற்றை விசா­ரித்த நீதி­ப­திகள், கோவில் விழாக்­கள் என்ற பெய­ரில் ஆபாச நட­னம், பாடல்­கள் இடம்­பெறு­வ­தாக வந்­துள்ள புகார்­களைச் சுட்­டிக்­காட்­டி­னர். அத்­த­கைய நிகழ்வு­களைத் தவிர்க்க வேண்­டும் என்று குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், பார்­வை­யா­ளர்­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் முகக்கவ­சம் அணிய வேண்­டும் என்­பது உள்­பட பல்வேறு நிபந்­த­னை­க­ளு­டன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனு­மதி வழங்­கி­னர்.

இதற்­கி­டையே, உயர் நீதி­மன்றக் கிளை­யில் மதுரை, திருச்சி, நெல்லை உட்­பட பதி­னான்கு மாவட்­டங்­களில் இருந்து ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் கோவில் திரு­வி­ழா­வின்­போது சில நிகழ்ச்­சி­களை நடத்த அனு­மதி கோரி மனுக்­கள் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

அவை நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, நீதி­பதி ஆர்.தாரணி கோவில் விழாக்­களில் இனி ஆடல், பாடல் நிகழ்ச்­சி­களை நடத்த அனு­மதி வழங்க இய­லாது என அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார்.

கோவில் விழாக்­களை வழக்­கம்­போல் நடத்­த­லாம் என்று குறிப்­பிட்ட அவர், மற்ற நிகழ்ச்­சி­க­ளுக்கு அனு­மதி அளிக்க முடி­யாது என்­றார்.

கோவில் திரு­வி­ழா­வுக்­கும் ஆடல், பாடல் நிகழ்ச்­சிக்­கும் கோயில் விழா­வுக்­கும் என்ன தொடர்பு உள்­ளது என்று கேள்வி எழுப்­பிய அவர், இதற்கு செல­வாகும் பணத்தை நீர் நிலை­களை தூர்­வாரு­வ­தற்கு பயன்­ப­டுத்­த­லாம் என்று ஆலோ­சனை வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!