‘சிதம்பரம் கோவில் நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்படவில்லை’

மயி­லா­டு­துறை: தமி­ழக அரசு சிதம்­ப­ரம் நட­ரா­ஜர் கோவில் நிர்­வா­கத்­துக்­கும் தீட்­சி­தர்­க­ளுக்­கும் எதி­ராக செயல்­ப­ட­வில்லை என இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

பக்­தர்­கள் பலர் கூறிய புகார்­கள் தொடர்­பாக ஆய்வு மேற்­கொள்ள தமது துறை ஆலோ­சித்­த­தா­க­வும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே கோவில் நிர்­வா­கத்­துக்கு அற­நி­லை­யத்­துறை கடி­தம் அனுப்­பி­ய­தா­க­வும் அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

மேலும், சிதம்­ப­ரம் நட­ரா­ஜர் கோவிலை இந்து சமய அற­நி­லை­யத்­துறை ஏற்­கும் என கடி­தத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்­றும் அமைச்­சர் சேகர் பாபு சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இதற்­கி­டையே, தரு­ம­புரி ஆதீ­னத்­துக்கு வரு­கை­பு­ரிந்த அமைச்­சர் சேகர் பாபு, பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், ஆதீ­னங்­க­ளுக்கு உண்­டான சிறப்பை தமி­ழக அரசு வழங்­கும் என்­றும், அவற்­றின் பாரம்­ப­ரி­யங்­களில் தமி­ழக அர­சும் இந்து அற­நி­லை­யத் துறை­யும் தலை­யி­டாது என்­றும் குறிப்­பிட்­டார்.

அதே­வே­ளை­யில், பொதுக் கோவில்­களில் ஏதே­னும் பிரச்­சி­னை­கள், முறை­கே­டு­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தால், அதில் தலை­யி­டும் உரிமை அற­நி­லை­யத்­து­றைக்கு உண்டு என்­றும் அவர் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

"சிதம்­ப­ரம் கோவில் தொடர்­பாக பக்­தர்­கள் தெரி­வித்த புகா­ரின்­படி, விருப்பு வெறுப்பு இன்றி விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. நியா­யத்­தின்­ப­டியே அற­நி­லை­யத்­துறை செயல்­படும். அற­நி­லை­யத் துறை கடி­தம் அனுப்­பி­யது தீட்­சி­தர்­க­ளுக்­கும் நட­ரா­ஜர் கோவில் நிர்­வா­கத்­துக்­கும் எதி­ரான நட­வ­டிக்கை அல்ல," என்­றார் சேகர் பாபு.

சிதம்­ப­ரம் நட­ரா­ஜர் கோவி­லில் அற­நி­லை­யத்­துறை உறுப்­பி­னர்­கள் குழு வரும் 7, 8ஆம் தேதி­களில் ஆய்வு மேற்­கொள்ள இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தீட்­சி­தர்­கள் பிர­த­ம­ரைச் சந்­திப்­ப­தா­கக் கூறு­வது அவர்­க­ளது ஜன­நா­யக உரிமை என்­றும் அதில் தலை­யி­டப் போவ­தில்லை என்­றும் அமைச்­சர் மேலும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!