போராட்­டம் நடத்­திய இைளஞர்­கள் கைது அக்னி பாதை திட்­டத்­தைத் திரும்­பப் பெற முதல்­வர் வலி­யு­றுத்து ஆளுநர்: ‘அக்னி பாதை’ பற்றிய புரிதல் அவசியம்

சென்னை: 'அக்னி பாதை' திட்­டத்­துக்கு எதி­ராக சென்­னை­யி­லும் 300 இளை­ஞர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். சென்னை தலை­மைச் செய­ல­கம் அருகே உள்ள போர் நினை­வுச் சின்­னம் முன்பு இந்­தப் போராட்­டம் நடந்­தது.

இளை­ஞர்­கள் போராட்­டத்தைக் கைவிட வேண்­டு­மென காவல்­துறை­யி­னர் எச்­ச­ரித்­தும் அவர்­கள் கலைந்து செல்­லாத நிலை­யில், கைது நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னர்.

கைதா­ன­வர்­க­ளைப் பேருந்­தில் ஏற்றி ராஜ­ரத்­தி­னம் மைதா­னத்­திற்கு அழைத்­துச்­சென்று அங்கு அடைத்து வைத்­த­னர்.

வட­மா­நி­லங்­க­ளைப் போல ரயில் எரிப்­புச் சம்­ப­வங்­கள் தமி­ழ­கத்­திலும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தால் மெரினா, போர் நினை­வுச் சின்­னம் உள்­ளிட்ட இடங்­களில் காவல்­துறை­யி­னர் கண்­கா­ணிப்­பைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அதே­போல நேப்­பி­யர் பாலம் முதல் போர் நினை­வுச் சின்­னம் வரை­ போக்­கு­வ­ரத்­துக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளின் ராணு­வப் பணி என்ற லட்­சி­யத்தை சிதைக்­கும் 'அக்னி பாதை' ராணுவ ஆட்சேர்ப்­புத் திட்­டத்தை திரும்­பப் பெற மத்­திய அர­சுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா லின் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இத்­திட்­டம் தேச நல­னுக்கு எதி­ரா­னது என­வும் அவர் கூறி­னார்.

'அக்னி பாதை' திட்­டத்தை மத்­திய அரசு கைவி­ட­வேண்­டும் என்று காங்­கி­ரஸ் தலைவா் கே.எஸ்.அழ­கிரி, மாா்க்சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச்­செ­யலா் கே.பால­கி­ருஷ்­ணன், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலைவா் தொல்.திரு­மா­வ­ள­வன் ஆகியோா் வலி­யு­றுத்தி­உள்­ளனா்.

"முப்­ப­டை­களில் பணி­யாற்றி ஓய்வுபெற்ற அதி­கா­ரி­களும் எதிா்க்­கும் இந்­தத் திட்­டத்தை மத்­திய அரசு கைவிட வேண்­டும்," என்று கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

"இந்­திய இளை­யர்­க­ளின் நிரந்­தர வேலை­வாய்ப்பு கன­வில் மண் அள்­ளிப்­போ­டு­வ­தோடு, ராணு­வக் கட்­ட­மைப்­பை­யும் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக திட்­டம் உள்­ளது," என கே.பால­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

தூத்­துக்­குடி காம­ரா­ஜர் கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் வ.உ. சிதம்­ப­ர­னா­ரின் 150வது பிறந்­த­நாள் விழா நடந்­தது.

ஆளு­நர் ஆர்.என்.ரவி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

மத்­திய அர­சின் 'அக்னி பாதை' ராணுவ ஆட்சேர்ப்பு திட்­டம் இளை­ஞர்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­தம் என்று குறிப்­பிட்­டார்.

இந்த திட்­டத்­தில் நான்கு ஆண்டு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

நாட்­டுப்­பற்று, தன்­னம்­பிக்கை, நல்ல ஒழுக்­கம் நிறைந்த இளை­ஞர்­கள் உரு­வாக்­கப்­ப­டு­வார்­கள். நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சுய தொழில் தொடங்­கும் வகை­யில் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் பயன் அடை­வார்­கள். இந்த உன்­னத திட்­டத்தை தவ­றா­கப் புரிந்­து­கொண்டு எதிர்ப்­பது வருத்­தம் அளிக்­கிறது.

'அக்னி பாதை' திட்­டம் பற்­றிய புரி­தல் அவ­சி­யம். நாட்­டின் வளர்ச்­சி­யில் இந்த திட்­டம் முக்­கி­யப் பங்­காற்­றும்.

2047ல் இதர நாடு­க­ளுக்­கும் 'அக்னி பாதை' திட்­டம் வழி­காட்­டி­யாக அமை­யும் என்று ஆளு­நர் ரவி பேசி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!