‘இரட்டைத் தலைமை காலாவதி ஆகவில்லை’

சென்னை: அதி­மு­க­வில் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பதவி காலா­வதி ஆக­வில்லை என்று ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர் வைத்திலிங்­கம் தெரி­வித்­தார். எங்­க­ளுக்கு ஒற்­று­மை­யும் கூட்­டுத் தலை­மை­யும்தான் வேண்­டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதி­மு­க­வில் பத­விச் சண்டை உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலை யில், பன்­னீர்­செல்­வம் டெல்­லி­யில் தொடர்ந்து முகா­மிட்­டுள்­ளார். சென்னை திரும்­பும் பய­ணத்தை அவர் ரத்து செய்­துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

அதி­மு­க­வில் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வி­கள் காலா­வதி ஆகி­விட்­ட­தாக பழனிசாமியின் ஆதரவாள ரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

அவைத் தலை­வ­ராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட திலும் அடுத்த பொதுக்­குழு கூட்­டம் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறி­விக்கப்பபட்டதிலும் எந்த விதி மீறலும் இல்லை எனவும் அவர்கள் விளக்கம் கூறி­யுள்­ளனர்.

இந்நிலையில், அதி­முக அவைத் தலை­வர் தமிழ்மகன் உசேன் தேர்வு தீர்­மா­னம் செல்­லாது என பன்­னீர்­செல்­வம் தரப்பினர் மீண்­டும் பதி­லடி கொடுத்­துள்­ளனர்.

இதனிடையே, விழுப்­பு­ரத்­தில் அதி­முக அலுவல­கம், சுவ­ரில் வரை யப்பட்ட ஓவி­யங்­களில் இருந்து ஓபி­எஸ் உரு­வம் வெள்­ளைச் சாயம் பூசி அழிக்கப்பட்டது. அதே­போல், வேதா­ரண்யத்­தில் பழ­னி­சாமி உரு­வ­பொம்­மையை எரித்து ஓ.பன்­னீர்­செல்­வம் ஆதரவாளர்­கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!