தாய்லாந்து மருத்துவர்கள் பார்வதி யானையின் கண்புரை பாதிப்பை குணப்படுத்த சிகிச்சை

மதுரை: மீனாட்சி சுந்­த­ரேஸ்­வ­ரர் திருக்­கோ­யில் யானை பார்­வ­திக்கு தாய்­லாந்து மருத்­து­வர்­கள் மூலம் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக நிதி­ய­மைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

26 வயது யானை பார்­வ­தி­யின் இடது கண்­ணில் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு கண்­புரை பாதிப்பு ஏற்­பட்­டது. உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், இரண்­டா­வது கண்­ணுக்­கும் பர­வி­யது.

இதை­ய­டுத்து, தாய்­லாந்து நாட்­டில் யானை­க­ளுக்கு என்றே சிகிச்சை அளிக்­கக்கூடிய தலை சிறந்த மருத்­து­வர்­கள் மது­ரைக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

ஏழு பேர் கொண்ட மருத்­து­வக் குழு­வி­னர், பார்­வ­தி­யின் கண்­களை நேரில் பரி­சோ­தித்து கண்­புரை பாதிப்பு எந்த அள­வில் உள்­ளது, எந்த மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­க­வேண்­டும் என்­பது குறித்து ஆய்வு செய்­த­னர்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், "தொழில்­நுட்­பம் நம்­மி­ட­மும் உள்­ளது. ஆனால், இது­போல் பல­முறை சிகிச்சை அளித்­த­வர்­க­ளின் அனு­ப­வத்­தைப் பயன்­ப­டுத்தி பார்­வதி­யின் கண் பிரச்­சினைக்கு சிகிச்சை அளிக்க முடி­வெ­டுத்தோம்.

"யானைக்கு அறுவை சிகிச்சை என்­பது கடி­ன­மா­னது என்­ப­தால் மருந்து மூல­மா­கவே குணப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. மனி­தர்­க­ளுக்கு மட்­டு­மின்றி, விலங்­கு­க­ளுக்­கும் சிகிச்சை அளிப்­ப­தற்­காக தமி­ழக அரசு ரூ.20 கோடி நிதி நிதி ஒதுக்­கீடு செய்­துள்­ளது," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!