நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 பேராக உயர்வு

மணிப்பூர்: மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

இம்பால், மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்தனர். இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் எனவும் அதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!