நாளை முதலீட்டாளர்கள் மாநாடு: 60 ஒப்பந்தம், 70,000 வேலைவாய்ப்பு

சென்­னை: சென்­னை­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் தொழில் முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நாளை நடை­பெற உள்­ள­தாக மாநி­லத் தொழில்­துறை அமைச்­சர் திரு தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­துள்­ளார்.

சென்னை தலை­மைச் செய­லகத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்­த­பின்னர் 132 நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்யப்பட்டுள்ளது.

“இதன்மூலம், ஏறக்­கு­றைய ரூ.95,000 கோடி முத­லீ­டு­கள் ஈர்க்கப்­பட்­டு, 226,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்­துள்­ளன,” என்று கூறி­னார்.

நாளை நடக்கவுள்ள மாநாட்­டில் பல்­வேறு முக்­கிய நிறு­வ­னங்­க­ளுடனும் ஏறக்­கு­றைய 60 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தா­கும் சூழல் உள்­ள­தா­க­வும் இதன்­மூ­லம் 70,000 பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தா­க­வும் திரு தங்­கம் ெதன்­ன­ரசு மேலும் தெரி­வித்­தார்.

“நாளைய 4ஆம் தேதி மிக முக்­கிய நாளாக அமை­யும். பெரிய நிறு­ வ­னங்­கள் பல­வும் ெதாழில் முத­லீட்டு ஒப்­பந்­தங்­களைத் தமிழக அர­சு­டன் மேற்­கொள்ள உள்­ள­ன. முதல்­வர் முன்­னி­லை­யில் 60 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாக உள்­ளன.

“இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் தொழில் புரிய உகந்த மாநி­லங்­கள் பட்­டி­ய­லில் 14வது இடத்­தில் இருந்த தமி­ழ­கம் தற்­போது மூன்­றாம் இடத்­துக்கு முன்­னேறி உள்­ளது,” என திரு தங்­கம் தென்­ன­ரசு கூறி­னார்.

இத­னால் தமி­ழத்­தில் தொழில் தொடங்க முன்­னணி நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்டி வரு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

கோவை, மது­ரை­யில் உயர் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் தொடங்­குவ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட்டுள்­ள­தா­க­வும் கடந்த ஓராண்­டில் தென் தமி­ழ­கத்­தில் 16,709 கோடி ரூபாய்க்கு முத­லீ­டு­கள் ஈர்­க்கப்­பட்டு, 55,000 பேருக்கு வேலை கிடைத்­தி­ருப்­ப­தா­க­வும் தங்­கம் தென்­ன­ரசு கூறி­னார்.

தற்­போது புதி­தாக 38 தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்சுவார்த்தை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!