சேகர்: புதுவையில் நான்தான் ஒற்றைத் தலைமை; அன்பழகன்: வியாபாரியல்ல, அரசியல்வாதி அதிமுகவில் பண விநியோகம்

புதுச்­சேரி: கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடை­பெற்ற பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் பங்­கேற்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குப் பெரும் தொகை தரப்­பட்­ட­தாக புதுச்­சேரி மாநி­லச் செய­லா­ளர் ஓம்­சக்தி சேகர் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இந்­தத் தக­வல் ஒட்­டு­மொத்த அதி­மு­க­வி­னர் மத்­தி­யில் சர்ச்­சை­யைக் கிளப்­பி­விட்­டுள்­ளது.

தமி­ழக அதி­மு­க­வில் எழுந்­துள்ள ஒற்­றைத் தலைமை முழக்­கம், யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரி­யி­லும் எதி­ரொ­லித்­துள்­ளது.

புதுச்­சே­ரி­யில் அதி­மு­க­வின் கிழக்கு மாநி­லச் செய­லா­ள­ராக அன்­ப­ழ­க­னும் மேற்கு மாநி­லச் செய­லா­ள­ராக ஓம்­சக்தி சேக­ரும் இருந்­து­வ­ரு­கின்­ற­னர்.

இவர்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் முர­ணான கருத்­து­க­ளைப் பகிர்ந்து வரும் நிலை­யில், பொதுக்­கு­ழு­வில் பணம் கொடுக்­கப்­பட்ட விவ­ரத்தை ஓம்­சக்தி சேகர் பகி­ரங்­கப்­ப­டுத்தி­உள்­ளார்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், “கட்சி, சின்­னம், கொடி யாரி­டம் செல்­கி­றதோ, அவர் களது தலை­மை­யைத்­தான் ஏற்­போம். அதி­முக பிளவுபடத்­தான் போகிறது. கட்­சிக்கு இனி ஒற்­றைத் தலை­மை­தான். எனினும், ஈபி­எஸ், ஓபி­எஸ் இரு­வ­ரை­யும் இரு கண்­களா­கத்தான் பார்க்­கி­றேன்.

“தமி­ழ­கத்­தில் அதி­முக ஒற்றைத் தலைமை ஏற்­ற­வு­டன் புதுச்­சே­ரி­யில் அதி­மு­க­வின் ஒற்­றைத் தலை­மை­யாக நான்­தான் செயல்படுவேன். அன்­ப­ழ­கன் கட்­சி­யில் இருக்­க­மாட்­டார்,” என்று கூறி­னார்.

இதற்­கி­டையே, “கட்­சி­தான் எங்­ களது உயிர். காசு, பணம், ‘கமிஷன்’ என்­பதெல்லாம் வியா­பாரி­களுக்­குத் தான் பொருந்­தும். நான் வியா­பாரி அல்ல; அர­சி­யல்­வாதி. ஓபி­எஸ்­சின் பினா­மி­தான் ஓம்­சக்தி சேகர்,” என அன்­ப­ழ­கன் சாடியுள்ளார்.

இப்­படி இவர்­கள் இரு­வ­ருக்கு இடையே நடந்த மோத­லில், பழ­னி­சாமி பொதுக்­குழு உறுப்­பி­னர்­களுக்குப் பணம் கொடுத்து பெரும்­பான்மை ஆத­ரவு திரட்­டிய ரக­சி­யம் தற்­போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஈபி­எஸ், ஓபி­எஸ் இரு­வரையும் எனது இரு கண்­க­ளாகத்தான் பார்க்­கி­றேன். பொதுக்­குழுக் கூட்­டத்­தில் கொடுத்த மிகப்­பெ­ரிய தொகையை அன்­ப­ழ­கன் வாங்கி வந்து தனது வீட்­டில் வைத்­துக்கொண்­டார். ஓர் உறுப்­பி­ன­ருக்­குக் கூட பணம் கொடுக்கவில்லை. இது தவறில்லையா?

புதுவை அதிமுக செயலாளர் ஓம்­சக்தி சேகர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!