‘திமுக-காங்கிரஸ் உறவை உடைக்க சதித்திட்டம்’

சென்னை: திமுக-காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் குழப்­பம் ஏற்­ப­டுத்த சதி நடப்­ப­தாக காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர்­கள் தெரி­வித்துள்ளனர்.

திமு­க­வுக்­கும் காங்­கி­ர­சுக்­கும் இடை­யில் எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும் அடுத்த தேர்­த­லி­லும் அந்­தக் கூட்­டணி நீடிக்­கும் என்­றும் அவர்­கள் உறு­தி­யாக குறிப்­பிட்டு இருக்­கி­றார்­கள்.

இந்­தி­யா­வில் புதிய அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டும் எதிர்க்­கட்சி ஆத­ரவு வேட்­பா­ள­ரான யஷ்­வந்த் சின்­கா­வுக்கு காங்­கி­ரஸ் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ராகுல்­காந்தி ஆத­ரவு திரட்டி வரு­கி­றார்.

அவர், அண்­மை­யில் அதி­முக தலை­மைக் கழக செய­லா­ள­ரும் முன்­னாள் முதல்­வ­ரு­மான எடப்­பாடி பழ­னி­சா­மி­யு­டன் தொடர்­பு­கொண்டு ஆத­ரவு கேட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

இத்­த­க­வலை அதி­முக தரப்பு மறுக்­க­வில்லை. இது தமி­ழக அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்­பைக் கிளப்­பி­விட்டு இருக்­கிறது.

இத்­த­கைய ஒரு செய்­தியை ஏற்­கெ­னவே திமுக மறுத்­துள்­ளது.

திமு­க­வு­டன் கூடிய உறவை முறித்­துக்­கொண்டு எடப்­பாடி அதி­மு­க­வு­டன் கூட்டு வைக்க காங்­கி­ரஸ் யோசிப்­ப­தாக அர­சி­யல் பேச்­சு­கள் அடி­ப­டு­கின்­றன.

திமு­கவை விட்டு காங்­கி­ரஸ் வில­காது என்­றும் ஆனால், திமுகவை மிரட்டி அதிக இடங்­களைப் பெறு­வ­தற்­காக காங்­கி­ரஸ் கட்­சியே இத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­கிறது என்­றும் அரசியலில் பேச்சு அடி­படு­கிறது.

இந்த நிலை­யில், ராகுல் காந்தி, எடப்­பா­டி­யி­டம் ஆத­ரவு கேட்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் இரு­வர் கூறி­னர்.

அப்படி கூறும் செய்தி, திமுக- காங்கிரஸ் நட்பை உடைக்க இடம் பெறும் சதித்திட்டம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்

திமுக-காங்­கி­ரஸ் இரண்டும் நல்ல புரிந்­து­ணர்­வு­டன் இருப்­ப­தாக பெயர் குறிப்­பிட மறுத்­து­விட்ட அவ்விரு­வ­ரும் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!