காலரா பரவல் அதிகரிப்பு; பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

காரைக்­கால்: காரைக்­கா­லில் காலரா நோய் பர­வும் சூழல் உரு வாகி­யுள்ள நிலை­யில், தடுப்­புப் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரி­யின் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் லட்­சுமி நாரா­ய­ணன் தெரி­வித்­துள்­ளார்.

அதைத்­தொ­டர்ந்து காரைக்­கால் மாவட்­டத்­தில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாள்­க­ளுக்­கும் விடு­முறை அறி­வித்து ஆட்­சி­யர் முக­மது மன்­சூர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இந்த விடு­மு­றை­யின்­போது பள்ளி, கல்­லூ­ரி­களில் உள்ள குடி­நீர்த் தொட்­டி­க­ளைச் சுத்­தம் செய்­ய­வும் அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

144வது சட்­டப் பிரி­வின்­கீழ், மாவட்ட ஆட்­சி­யர் முகம்­மது மன்­சூர் சில உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­துள்­ளார்.

காரைக்­கா­லில் வாந்தி, வயிற்­றுப்­போக்­கால் ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பல­ருக்கு காலரா அறி­கு­றி­யும் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், பொது இடங்­களில் தேவை­யின்றி கூடு­வதை மக்­கள் தவிர்க்­க­வேண்­டும்.

ஹோட்­டல்­கள், கல்வி நிறு­வ­னங்­கள், திரு­மண மண்­ட­பங்­கள், மருத்­து­வ­மனை உள்­ளிட்ட இடங்­களில் கொதிக்­க­வைத்த அல்­லது சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடி­நீர்­தான் வழங்­க­வேண்­டும.

தண்­ணீர்த் தொட்­டி­கள் சுத்­தப்­படுத்­தப்­பட்டு குளோ­ரின் கலந்த தண்­ணீரை விநி­யோ­கிக்க வேண்­டும். கைக­ளைச் சோப்­புப் போட்டு கழு­வு­வ­த­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருக்­க­வேண்­டும்.

வர்த்­தக ரீதி­யாக குடி­நீர் விநி­யோ­கம் செய்­ப­வர்­களும் குளோ­ரின் கலந்த நீரைத்­தான் விநி­யோ­கிக்க வேண்­டும்.

மறு உத்­த­ரவு வரும் வரை இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் அம­லில் இருக்­கும். அனைத்து இடங்­க­ளி­லும் அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­வார்­கள். உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்­கா­த­வர்­களுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று ஆட்சியர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இத­னி­டையே, கடந்த சில நாட்­களாக கழி­வு­நீர் கலந்த குடி­நீர், சுகா­தா­ர­மற்ற உண­வு­க­ளால் வாந்தி, வயிற்­றுப்­போக்கு ஏற்­பட்டு 1,700க்கும் மேற்­பட்­டோர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வ­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

காரைக்­கா­லில் காலரா பர­வலை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அவ­சர நிலையை; பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி குடும்ப நலன், பொது சுகா­தா­ரத்­துறை அறி­வித்துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!