அதிமுக பொதுக்குழு குறித்த விசாரணை ஒத்திைவப்பு

திரு­வள்­ளூர்: வரும் 11ஆம் தேதி நடைபெற உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள பொதுக்­குழு கூட்­டத்தில் அதி­முக பொதுச் செய­லா­ள­ராக எடப்­பாடி பழனி­சா­மியை தேர்வு செய்ய அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் முழுவீச்­சில் கள­மி­றங்கி உள்ளனர்.

ஆனால், இக்கூட்­டம் செல்­லாது என உத்­த­ர­வி­டக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும்படி கோர தனி நீதிபதியை அணுகவும் அறிவுறுத்தினர்.

இதனிடையே, முன்­னாள் அமைச்­சர்­கள் தங்­க­மணி, ஆர்.பி.உத­ய­கு­மார், விஜய்பாஸ்­கர் ஆகி­யோர் எடப்­பாடி பழனிசாமி­யு­டன் ஆலோ­சனை நடத்­தி­னர். அதே­போல், ஓ.பன்­னீர்செல்­வ­மும் வைத்தி­லிங்­கம், மனோஜ் பாண்­டி­யன் உள்­ளிட்ட ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தமது இல்­லத்­தில் ஆலோ­சித்­தார்.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய வைத்­தி­லிங்­கம், "அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை.

"கடந்த ஜூன் 23ஆம் தேதி கூட்­டப்­பட்ட பொதுக் குழுக் கூட்டம் சட்­டப்­பூர்­வ­மா­னது அல்ல. அைவத் தலை­வ­ராக தமிழ் மகன் உசேன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட விதமும் செல்­லாது," என்­றார்.

இந்தச் சூழலில், அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­துக்கு தான் தகுந்த நேரத்­தில் தொண்­டர்­களு­டன் செல்­ல­வுள்­ள­தாக திரு­மதி வி.கே. சசி­கலா கூறி­யுள்­ளது புதிய பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தமது மூன்­றா­வது அர­சி­யல் பய ணத்தை திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் தொடங்­கி­யுள்ள சசி­கலா, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "பண­ப­லம், படை­ப­லத்­தால் ஒரு தலை­மையை தீர்­மா­னிக்க முடி­யாது. மக்­கள் பல­மும் தொண்­டர்­கள் பல­மும்­தான் ஒரு தலை­மை­யைத் தீர்­மா­னிக்­கும்.

"பத்து, இரு­பது பேரை தனக்கு ஆத­ர­வா­கப் பேச வைத்­து­விட்டு, நான்­தான் தலைமை என்று வலுக்­கட்­டா­ய­மாக நாற்­கா­லியைப் பிடித்­துக்­கொண்டு இருந்­தால் தலைவர் ஆகி­வி­ட ­மு­டி­யாது," என்று சசி­கலா காட்­ட­மா­கக் கூறி­யுள்­ளார்.

அதி­முக தொண்­டர்­கள் ஒரு போதும் எதேச்­ச­தி­கா­ரத்தை ஏற்­க­மாட்­டார்­கள் என்­றும் யாரும் யாரை­யும் நீக்கமுடி­யாது எனவும் சசி­கலா அதி­ர­டி­யா­கக் கூறி­யுள்­ளது ஓ பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­களை உற்­சா­கத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

எம்­ஜி­ஆர், ஜெய­ல­லி­தா­வைப் போல் தொண்­டர்­க­ளின் ஆத­ர­வு­டன் அதி­முக ஆட்­சியை மீண்­டும் தான் கொண்­டு­வ­ரப் போவ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!