தமிழ்நாட்டில் இருந்து தமிழ்ச்செல்வி என பிரதமரிடம் அறிமுகம்

மதுரை: மது­ரை­யைச் சேர்ந்த பெண் ஒரு­வர், 'தமிழ்ச்­செல்வி ஃப்ரம் தமிழ்­நாடு' எனத் தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்டு பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் பேசி பாராட்டு களைப் பெற்­றுள்­ளார்.

மதுரை மாவட்­டம், கள்­ளிக்­குடி­யில் வசித்து வரும் தமிழ்ச்­செல்வி, கடந்த நான்­காண்­டு­க­ளாக சிறு­தா­னிய உண­வு­க­ளைப் பாக்­கெட்­டு­க­ளா­கத் தயா­ரித்து விற்­பனை செய்­து­வ­ரு­கி­றார்.

"நான் எம்ஏ., எம்.எஸ்சி., எம்.எட்., முடித்­துள்­ளேன். மது­ரை­யில் உள்ள கதர் கிரா­மத் தொழில்­கள் ஆணை­யத்­தில் கடன்­பெற்று சத்து­மா­வு­டன் சிறு­தொ­ழில் தொடங்­கி­னேன். இப்­போது, உட­ன­டி­யாக சமைக்­கக் கூடிய தினைப் பொங்­கல், வர­குப் பொங்­கல் உட்­பட 60 வகை­யான பொருள்­க­ளைத் தயா­ரித்து விற்­பனை செய்து வருகி ேறன்," என்­கி­றார் தமிழ்ச்­செல்வி.

இவர், அண்­மை­யில் பிர­த­மர் மோடியை நேரில் சந்­தித்து பேசி­யது குறித்து கூறு­கை­யில், "கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி சிறு, குறு, நடுத்­தர தொழில்­க­ளுக்­கான தினம் என்­ப­தால், டெல்­லி­யில் பிர­த­மர் மோடி பங்­கேற்ற நிகழ்ச்­சி­யில் நானும் கலந்­து­கொண்­டேன். பிர­த­ம­ரைப் பார்த்­த­தும் என்னை அறி­யா­மல் கைகளை மேலே உயர்த்த, உடனே, பேசும்­படி சொன்­னார்.

'தமிழ்ச்­செல்வி ஃப்ரம் தமிழ்­நாடு' என்­ற­தும் 'வணக்­கம்' என்று தமி­ழில் சொன்­னார். தமி­ழ­கத்­தில் எங்­கி­ருந்து வரு­கி­றீர்­கள்? என்ன செய்­கி­றீர்­கள்? என்று கேட்­ட­பின், "நல்­லது, உள்­ளூர் விற்­ப­னை­யி­லும் கவ­னம் செலுத்­துங்­கள்," என பிர தமர் அறிவுறுத்தினார் என்­றார்.

பிரதமருடன் நான் நேரில் பேசியது ஒரு கனவு போல இருக்கிறது. இப்போது சிறிய அளவில் 60 உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். விரைவில் பெரிய அளவில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெறுவேன்.

சிறுதொழிலில் ஈடுபடும் தமிழ்ச்செல்வி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!