காலரா அச்சம்: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்

சோழிங்கநல்லூர்: காரைக்காலில் காலரா நோய் பரவி வருவதன் காரணமாக, தமிழக மாவட்டங்களை விழிப்பு நிலையில் வைத்திருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூரில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "யூனியன் பிரதேசமான புதுச்சேரி யில் இதுவரை 39 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

"இதையடுத்து, காரைக்காலைச் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை யும் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, நாகப் பட்டினம் மாவட்டத்தின் திருமருகல், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட் டத்தின் கொல்லாபுரம், வெல்லாங் குடி உள்ளிட்ட காரைக்காலை ஒட்டி யுள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ள சுகாதாரத் துறையினர் நேரடியாக அங்குள்ள குடிநீரை ஆய்வு செய்து உள்ளனர். அத்துடன் ஆரம்ப சுகா தார நிலையங்களில் வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவற்றுக்குத் தேவையான மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்கவும் அறி வுறுத்தப்பட்டு உள்ளது," என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

ரூ. 500 அபராதம்

இதனிடையே, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், முகக்கவசம் அணியா விட்டால் ரூ.500 அபராதம் விதிக் கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!